தமிழ்த் திரையுலகினரின் கோரிக்கையைத் தமிழக அரசு பரிசீலனை செய்யவேண்டும் என்று ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்ததற்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார்.
திரையரங்குகளுக்கு 28 சதவீத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்புக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாநில அரசின் உள்ளாட்சி கேளிக்கை வரியும் திரையரங்குகளுக்கு கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 சதவீத கேளிக்கை வரி திரையரங்குகளுக்கு விதித்துள்ளது. மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியை ஏற்றுக்கொள்ளும் நேரத்தில், தமிழகஅரசின் கேளிக்கை வரிக்கு தமிழ்த் திரை அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசின் 30 சதவீத கேளிக்கை வரியை எதிர்த்து தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக 1,200 தியேட்டர்கள் காலவரையின்றி மூடுவதாக உரிமையாளர்கள் அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேளிக்கை வரியை எதிர்த்து இரண்டாவது நாளாக தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டதால் ரூ.35 கோடி வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர். திரையரங்குகள் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் திரைத்துறையைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகத் தெரிகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் செவ்வாய்க்கிழமை (ஜூலை 4) பேச்சுவார்த்தை நடைபெறும் எனக் கூறப்பட்டாலும், பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இதனால் போராட்டம் புதன்கிழமையும் (ஜூலை 5) தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகளில் புதன்கிழமை (ஜூலை 5) அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ரஜினி ட்விட்டர் பக்கத்தில் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: தமிழ்த் திரையுலகை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு திரையுலகினரின் கோரிக்கையைப் பரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
ஜிஎஸ்டி விவகாரத்தில் திரையுலகுக்காகக் குரல் கொடுத்த ரஜினிக்கு நன்றி. முதலில் கோரிக்கை விடுப்போம். பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜார்க்கண்டில் 840 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்: பிகாரைச் சேர்ந்த 6 பேர் கைது

பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு!

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்!

கொடைக்கானலில் மக்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர்! | MK Stalin | DMK
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


