அடுத்தவர்களின் வாழ்வில் என்ன நடக்கிறது? என்று அறிந்து கொள்ள விரும்புவது மனித சுபாவம்... பிறரது வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொண்டு அவர்களை விட நாம் நன்றாக இருக்கிறோம் என்று கருதுவதில் தான் மக்கள் திருப்தி அடைகிறார்கள்... இல்லையா?! அது தான் இந்தப் போட்டியின் வெற்றி. ஆங்கிலம், இந்தி, என இந்த ரியாலிட்டி ஷோ அனைத்து மொழிகளிலும் மக்களால் விரும்பிப் பார்க்கப் படுவதற்கும் இதுவே காரணம். என்கிறார் அனுயா. அதோடு போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று உங்களால் பெட் கட்ட முடியுமா? என்ற கேள்விக்கு. என்னைப் பொறுத்தவரை அங்கிருந்தவர்களில் ‘கணேஷ் வெங்கட் ராம்’ புத்திசாலி. அவர் மற்ற பங்கேற்பாளர்களுடன் எல்லா வகையிலும் நட்புணர்வோடு அனுசரித்துச் செல்லும் மனப்பான்மை உடையவராக இருக்கிறார். போட்டியில் வெல்வதற்கு தலைவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அனைவருடனும் உண்மையான தோழமையோடு பழகத் தெரிந்தாலே போதும்’ என்றும் அனுயா கூறியுள்ளார்.