‘குயின்’ கங்கணா ரனாவத் ஏன் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களுடன் நடிக்கவில்லை?
வழக்கமாக நான் எந்தக் கவர்ச்சியுமற்ற யதார்த்தமான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன். எனவே கான்களின் படத்தில் நான் இல்லாமல் போவது ஆச்சரியமில்லை!


இந்தக் கேள்விக்கு கங்கணாவின் பதில்;
பாலிவுட் சூப்பர் ஸ்டார்களுடன் நடிக்க தொடர்ந்து எனக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் தான் இருக்கின்றன. ஆனால் என்னால் தான் அவற்றை ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் என்னுடைய படத்தில் எனக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். சூப்பர்ஸ்டார்களைப் பொறுத்தவரை படம் அவர்களைச் சுற்றியே நகர வேண்டும் என்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் நாயகியாக நடிக்கும் படத்தில் எனக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என நினைப்பவள் நான். ஆகவே பெரிய ஹீரோக்களின் படத்தில் நான் இல்லை. அதே போல என் படத்திலும் அவர்கள் இல்லை.
வழக்கமாக நான் எந்தக் கவர்ச்சியுமற்ற யதார்த்தமான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன். எனவே கான்களின் படத்தில் நான் இல்லாமல் போவது ஆச்சரியமில்லை! மேலும் அவர்களின் இடத்தை நான் அடைய முடியாது என்பதில்லை. அவர்களது வயதில் நானும் எனது நடிப்பாற்றல் மற்றும் கடின முயற்சிகளால் அந்த இடத்தை ஒரு நாள் அடைவேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...