தமிழ், மலையாளப் படங்களில் நடித்துவரும் கேரள நடிகை தனது காரில் வெள்ளிக்கிழமை இரவு படப்பிடிப்பு முடித்து கொச்சியிலிருந்து திருச்சூருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். இவரது கார் எர்ணாகுளத்தை அடுத்த அங்கமாலி அருகே வந்தபோது, மற்றொரு வேனில் வந்த மர்மக் கும்பல் நடிகையின் காரை வழிமறித்தது. வேனில் இருந்த மர்ம நபர்கள், கார் ஓட்டுநரைத் தாக்கி நடிகையை காருடன் கடத்திச் சென்றனர். அப்போது நடிகையைத் துன்புறுத்தி, அந்த காட்சியை புகைப்படமாகவும், விடியோவாகவும் அவர்கள் பதிவு செய்தனர். பிறகு, காரில் இருந்து இறங்கி மற்றொரு காரில் ஏறி அந்தக் கும்பல் தப்பிச் சென்றது. இதையடுத்து, காக்கநாடு பகுதியில் உள்ள ஓர் இயக்குநரின் வீட்டுக்குத் தானே காரை ஓட்டிச் சென்று நடிகை உதவி கேட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், நடிகை துன்புறுத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கோவையில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் கேரள தனிப்படை ஐ.ஜி. தினேஷ் காஷ்யப் உத்தரவின் பேரில், எர்ணாகுளம் ரூரல் எஸ்.பி. சி.விக்ரம் தலைமையிலான காவல் துறையினர் கோவை வந்தனர். பின்னர், கோவையில் பதுங்கி இருந்த இருவரைக் கைது செய்தனர். அவர்கள், ஆலப்புழையைச் சேர்ந்த சலீம், கண்ணூரைச் சேர்ந்த பிரதீப் என்று கூறப்படுகிறது.
மேலும் 7 பேரிடம் விசாரணை: இதனிடையே, நடிகை துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது கார் ஓட்டுநர் மார்ட்டின் உள்பட 7 பேரிடம் கேரள போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தில், மலையாள நடிகர்-நடிகையர்களிடம் முன்பு கார் ஓட்டுநராகப் பணிபுரிந்த பல்சர் சுனி என்பவர் உள்பட மேலும் 6 பேருக்குத் தொடர்பிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதனிடையே, நடிகையின் வாக்குமூலத்தை பெண் நீதிபதி ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்தார். கொச்சி அருகே உள்ள மருத்துவமனைக்கு நடிகை அழைத்துச் செல்லப்பட்டு, அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
கடத்தல் விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியாக உள்ள பல்சர் சுனியின் தொலைப்பேசி உரையாடல்களை காவல்துறை பெற்றுவருகிறது. அதில் சம்பவம் நடந்த அன்றைய தினத்தின் இரவில் ஒரு படத் தயாரிப்பாளருடன் பல்சர் சுனி பேசியது தெரியவந்துள்ளது. அன்றைய 6 பேரில் பேசியுள்ளார் சுனி. அதில் படத்தயாரிப்பாளரும் ஒருவர் என்பதால் இச்சம்பவத்துக்கும் திரைத்துறையினருக்கும் தொடர்பு இருக்குமா என்கிற கோணத்திலும் காவல்துறை விசாரித்துவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தஞ்சை பெரியகோயில் தேரோட்டம்; பக்தர்களுக்கு ஜூஸ், மோர் அளித்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்!

லடாக்கில் 5 புதிய மாவட்டங்களுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல்!

நீதிக் கதைகள்! கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


