மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

விஜய் 61-ல் ஜோதிகா 'அவுட்'; நித்யா மேனன் 'இன்' !

நடிகர் விஜயின் 61-ஆவது படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்ட நடிகை ஜோதிகா தற்பொழுது அந்த படத்திலிருந்து  விளக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:58 am

DIN

சென்னை: நடிகர் விஜயின் 61-ஆவது படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்ட நடிகை ஜோதிகா தற்பொழுது அந்த படத்திலிருந்து  விளக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதே நேரத்தில் அவருக்குப் பதிலாக நடிகை நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

நடிகை ஜோதிகா தனது திருமணத்துக்கு பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கணவர் நடிகர் சூர்யாவின் குடும்ப சம்மதத்துடன் மீண்டும் '36 வயதினிலே' படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆனார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் மட்டுமே நடிக்கலாம் எனவும், வெளியார் படங்களில் நடிப்பதில்லை என்பதையம் கொள்கையாக வைத்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் 'பைரவா' படத்தைத்த தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கஉள்ள படத்தில் மட்டும் நடிக்கலாம் என ஜோதிகா திட்டமிட்டு இருந்தார். படத்தின் பிளாஷ் பேக் பகுதியில் மட்டுமே வரும் கதாபாத்திரத்தில், நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் தற்போது விஜயுடன் சேர்ந்து நடித்தால் பின்னர் மற்ற கதாநாயகர்களும் அணுகுவார்கள் எனவே 'மகளிர் மட்டும்' போன்ற கதாநாயகர் இல்லாத படங்களில் மட்டும் நடித்து விட்டுப் போய் விடலாம் என்று அவரது கணவர் குடும்பத்தில் இருந்து அறிவுரைகளை வந்ததாகத் தெரிகிறது. இதனால் நடிகை ஜோதிகா படத்தில் பங்கேற்க இயலாது என்று சொல்லிவிட்டாராம்.

எனவே அவருக்கு பதிலாக நடிகை நித்யா மேனன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.