டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தனுஷ் நடிக்கும் மாரி 2 படத்தின் இசையமைப்பாளர் யார்?

ஒரு படத்தின் வெற்றிக்கு திறமையான கூட்டணி மிகவும் முக்கியம். அதிலும் இசை

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:26 pm

உமாகல்யாணி

ஒரு படத்தின் வெற்றிக்கு திறமையான கூட்டணி மிகவும் முக்கியம். அதிலும் இசையமைப்பு ஒரு படத்தை தூக்கி நிறுத்திக் கூடிய அளவுக்கு முக்கியமான பங்கு வகிக்கிறது எனலாம். 

தனுஷ் நடிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் மாரி 2. இந்தப் படத்தின் சில காட்சிகள் மட்டும் சமீபத்தில் எடுக்கப்பட்டது. மாரி 2-வில் சாய் பல்லவி தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

Story image

பாலாஜி மோகன், தனுஷ், அனிருத் கூட்டணியில் மாரி முதல் பாகத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது.

Story image

இந்நிலையில் சமீபத்தில் தனுஷின் படங்களுக்கு அனிருத் இசையமைப்பதில்லை. விஐபி 2 விலும் அனிருத்தின் பங்களிப்பு இல்லை. தனுஷ் அனிருத் பனிப்போரின் விளைவாக மாரி 2 படத்தின் இசையமைப்பாளர் யாராக இருக்கும் என்ற கேள்வி கோலிவுட்டில் இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார் என்ற அதிகாரபூர்வமான தகவலை படக்குழுவினர் வெளியிட்டனர்.

Story image

இதற்கு முன் தனுஷ் நடித்த ‘துள்ளுவதோ இளமை’ ‘காதல் கொண்டேன்’, ‘யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட பங்களுக்கு இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. 

Story image

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து தனுஷ் - யுவன் கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.{pagination-pagination}

இயக்குநர் பாலாஜி மோகன் தனது டிவிட்டரில் இச்செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.