சிரஞ்சீவி எனும் மெகாஸ்டார் இல்லாவிட்டால் பவன் கல்யாண் யார்? சிரஞ்சீவியின் தம்பியாக மட்டும் அவர் இல்லாமலிருந்தால், அவரை வைத்து டோலிவுட்டில் சினிமா எடுப்பவர்கள் யார்? அவரது படத்தைப் பார்ப்பவர்களும் தான் யார்? பவன் மட்டுமல்ல, மெகா குடும்பத்தில் தற்போது ஹீரோக்களாகி இருக்கும் அவரது மகன், மருமகன்கள், சிரஞ்சீவியின் தம்பிகள், தம்பியின் வாரிசுகள் என அனைவருமே சிரஞ்சீவி என்ற ஒரு மனிதர் கஷ்டப்பட்டு ஈட்டிய வெற்றியால் பிரபலமடைந்தவர்களே! மெகா குடும்பத்தில் தனது திறமையை மட்டுமே நம்பி முன்னுக்கு வந்தவர் என்றால் அது சிரஞ்சீவி ஒருவர் மட்டுமே! மற்றவர் அனைவரும் அவர் கஷ்டப்பட்டு ஈட்டிய வெற்றியை பயன்படுத்திக் கொண்டவர்களே தவிர அவரவர் திறமையால் மட்டுமே முன்னேறி பிரபலமடைந்தவர்கள் அல்ல! அப்படியிருக்கையில் பவன் கல்யாணுக்கு ஜெகன் மோகன் ரெட்டி குறித்து இப்படி ஒரு கமெண்ட் அடிக்கத் தகுதியே இல்லை என்று விளாசியிருந்தார்.