டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சமீபத்தில் உடல் எடை குறைத்த நடிகைகள் அனுஷ்கா மற்றும் ஹன்ஷிகா!

ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை எந்த நடிகையாக இருந்தாலும் அவர்களின்

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:19 pm

உமாகல்யாணி

ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை எந்த நடிகையாக இருந்தாலும் அவர்களின் திரையுலக வாழ்வு என்பது சிறிது காலம் மட்டுமே புகழின் உச்சத்தில் இருக்கும். விதிவிலக்காக மிகச் சில நடிகைகள் மட்டுமே உள்ளார்கள்.

Story image

கடந்த ஆண்டு வரை மோஸ்ட் வான்டட் நடிகைகளாக இருந்த அனுஷ்காவும் ஹன்ஷிகாவும் தமிழ், தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் கவனிக்கப்படும் ஹீரோயின்களாக வலம் வந்து கொண்டிருந்தனர்.

Story image

அனுஷ்கா அழகும் வசீகரத்தையும் தாண்டி திறமையான நடிகையும் கூட. ஆனால், ஆர்யாவுடன் அவர் நடித்த இஞ்சி இடுப்பழகி படத்துக்குப் பிறகு உடல் எடையை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார்.

Story image

அதன் பிறகு வெளியான பாகுபலி 2-ம் பாகத்திலும் கூட  கிராஃபிக்கிஸ் வேலையால் உடல் எடையை மறைத்தார்கள் எனக் கூறப்படுகிறது. 

Story image

இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் அவர் அதே எடையுடன் காணப்பட்டதால் சக நடிகர்கள், ரசிகர்கள், தயாரிப்பாளர்கள் என பல முனையிலிருந்து விமரிசனங்கள் அவருக்கு எதிராக எழுந்தன.

Story image

பிரபாஸுடன் சாஹோ படத்தில் இணையும் வாய்ப்பும் அவருக்கு இந்த உடல் எடைப் பிரச்னையால் இழக்க நேர்ந்தது என்கிறது டோலிவுட் வட்டாரம்.

Story image

இந்நிலையில், அனுஷ்கா டயட் மற்றும் யோகாவில் தீவிர கவனம் செலுத்தி,  தனது உடல் எடையை வெகுவாகக் குறைத்துவிட்டார்.

Story image

இணையதளங்களில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் அவரது புகைப்படங்கள் அனுஷ்காவா இது என்று ஆச்சரியப்பட வைக்கிறது.

Story image

போலவே, ஹன்ஷிகா பப்ளி நடிகையாகத்தான் கோலிவுட்டுக்கே காலடி எடுத்து வைத்தார். ஆனால் அவரது தோற்றத்துக்காக எழுந்த விமரிசனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் உடல் எடையைக் குறைத்து கச்சிதமான தோற்றத்துடன் காணப்பட்டார்.

Story image

அவர் ஜெயம் ரவியுடன் நடித்த போகன் திரைப்படத்தில் ரசிகர்களின் மனத்தை கவர்ந்தார். ஆனால் அதன்பிறகு குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்தப் படத்திலும் ஹன்ஷிகா ஒப்பந்தமாகவில்லை.

Story image

பெரிய ஹீரோக்கள் என்றாலும் சரி, புதிய நடிகர்களாக இருந்தாலும் சரி, ஹன்ஷிகா தன்னுடைய ரோலில் மட்டும் கவனம் எடுத்து ஈகோ பார்க்காமல் நடிக்கும் நடிகை என்ற பெயரைப் பெற்றிருந்தார்.

Story image

ஆனால் அவரது உடல் எடை எப்போதும் ஒரு பிரச்னையாகவே இருந்துவந்ததால் ஏற்கனவே அதைக் குறைத்தவர் சமீபத்தில் மீண்டும் அதிகளவில் குறைத்துவிட்டார்.

Story image

ஆனால் இந்தப் புதிய தோற்றம் அவரது முகப் பொலிவை குறைத்துவிட்டதாக ரசிகர்கள் சிலர் விமரித்துள்ளனர்.

Story image

ஹன்ஷிகா விடாப்பிடியாக உடற் பயிற்சிகளை மேற்கொண்டு இதே ஸ்லிம் தோற்றத்தில் உள்ளார்.  

Story image

கும்கி படம் மூலம் அறிமுகமான லட்சுமி மேனனுக்கும் இதே பிரச்னைதான். உடல் எடையை சமீபத்தில் வெகுவாக குறைத்து வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

Story image

ஹன்ஷிகா னுஷ்கா, லட்சுமி மேனன் என நடிகைகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது ரசிகர்களுக்கு உள்ள ஆர்வம் குறைந்துவிட்டால் அவர்களை விரைவில் மறந்துவிடுவார்கள் என்பது தமிழ் கூறும் திரையுலகத்தின் மாறாத விதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.