ரூ. 400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் - இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

வசனம் - ஜெயமோகன். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா-வும், முத்துராஜ் கலை இயக்குநராகவும், படத்தொகுப்பாளராக ஆண்டனியும், ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றியுள்ளார்கள். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகியுள்ளதால், இத்திரைப்படம் இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா துபையில் அக்டோபர் 27-ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆனால் அப்போதே '2.0' பட ரிலீஸ் அறிவித்தபடி நடைபெறுமா என்ற சந்தேகம் படக்குழுவினருக்கு இருந்தது. முன்னதாக 2017-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவிருந்த படமானது, கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாத காரணத்தால் ஜனவரி 2018, 26-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் 'பாட் மேட்' என்ற படமும் அதே மாதம் வெளியாகவிருந்ததால், 2.0 படத்தில் ரிலீஸ் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது. இது ரஜினி ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வரும் 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2.0 வெளியாகும் என லைகா நிறுவனம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என்ற செய்தியாளர்கள் அறிவிப்பில் தேதி குறிப்ப்பிடப்படவில்லை, ஆனால் படம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளிவரலாம் என்கிறது கோலிவுட் தரப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


