கிரிக்கெட் கமெண்ட்ரி புகழ் மந்த்ரா பேடியை மறக்க முடியுமா? உலகக் கோப்பை கிரிக்கெட் கமெண்ட்ரி பிரபலஸ்தர் எனும் நிலை தாண்டி அவர் பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும் நடிகை என்ற அவதாரத்தில் மந்த்ராவை அவரது ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. தமிழில்,சிம்புவின் ‘வல்லவன்’ திரைப்படத்தில் தலைகாட்டியவர் அதன் பின் பாலிவுட்டில் நடித்துக் கொண்டிருந்தார். தான் இருக்கும் இடமெல்லாம் தன்னையே சென்ட்டர் ஆஃப் அட்ராக்ஷனாக ஆக்கிக் கொள்ளத் தெரிந்த மந்த்ரா பேடி அகில உலகப் பிரபலமானது ஆச்சர்யமில்லை. இந்தியாவில் மந்த்ரா பேடியைத் தெரியாதவர்கள் என எவருமில்லை. அத்தகைய மந்த்ரா பேடி பிரபாஸின் ‘சாஹூ’ திரைப்படத்தில் நடிக்கக் கமிட் ஆகியிருக்கிறாராம். மந்த்ரா, சாஹூவில் நடிக்கப்போவதை, சாஹூ படக்குழு உறுதி செய்திருக்கிறது. நடிக்கப் போகிறாரே தவிர, அவர் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்? என்பது இன்னும் வெளியிடப்படவில்லை.