திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 மேக்கிங் வீடியோவின் சாதனை!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்ஸன் ஆகியோர் நடிக்கும் 2.0 படத்தின்

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:46 pm

உமாகல்யாணி

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்ஸன் ஆகியோர் நடிக்கும் 2.0 படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் யூ ட்யூப்பில் வெளியானது. இதுவரை கிட்டத்தட்ட 46 லட்சம் பார்வையாளர்களை இக்காணொலி பெற்றுள்ளது. 

மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 பட உருவாக்கம் சார்ந்த வீடியோவை வினாயகர் சதுர்த்தியையொட்டி சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர். ஒரு நிமிடம் 47 விநாடிகள் திரையில் ஓடும் இந்தக் காணொலியில் படத்தின் முக்கியமான சண்டைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

YouTube video thumbnail

மேக்கிங் வீடியோ வெளியான இந்த இரண்டு நாட்களிலேயே 46 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்த வீடியோவைப் பார்த்து ரசித்துள்ளனர். இந்த எண்ணிக்கை இதை எழுதிக் கொண்டிருக்கும் நிமிடத்திலும் கூட அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி படம் என்றால் மாஸ் என்று ரசிகர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.