ரஜினியை இயக்குவது தொடர்பாக பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து ஆங்கில நாளிழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
சில வருடங்களுக்கு முன்பு ரஜினி சாரிடம் ஒரு கதை சொன்னேன். அவருக்கும் அந்தக் கதை பிடித்தது. நான் ஒரு தீவிரமான ரஜினி ரசிகன். ஆனால் அதற்கு மேல் தொடரமுடியாமல் படம் ஆரம்பிக்கமுடியாமல் போய்விட்டது. ரஜினிக்காக ஒரு கதை தயாரிப்பது எனக்குக் கஷ்டமான விஷயம் இல்லை. என்னால் ஒரு மாதத்துக்குள் ரஜினிக்கேற்ற ஒரு கதையைத் தயார் செய்யமுடியும். அவருக்காக ஒரு கதையும் வைத்துள்ளேன்.
சந்தர்ப்பம் சரியாக அமையும்போது ரஜினியுடன் இணைந்து நிச்சயம் ஒரு படம் பண்ணுவேன் என்று கூறியுள்ளார்.
மகேஷ்பாபு நடிப்பில் உருவாகியுள்ள ஸ்பைடர் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகியுள்ள இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள படத்தை என்.வி.பிரசாத் மற்றும் தாகூர் மது தயாரித்துள்ளார்கள். செப்டம்பர் 29 அதாவது ஆயுத பூஜை அன்று படம் வெளிவருகிறது. இதற்கு அடுத்தகாக நடிகர் விஜய்யை மூன்றாவது முறையாக இயக்கவுள்ளார் ஏ.ஆர். முருகதாஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!

கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


