ஆகஸ்ட் 24 அன்று அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படம் வெளிவரவுள்ளது. இதையடுத்து தமிழ்த் திரையுலகமும் அஜித் ரசிகர்களும் பரபரப்புடன் படத்தின் முடிவை அறிய ஆவலாக உள்ளார்கள்.
சென்னையைத் தவிர இதர பகுதிகளுக்கான இப்படத்தின் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் தேவி, அண்ணா போன்ற திரையரங்குகளின் முன்பதிவு தொடங்கியுள்ளது. ரசிகர்களின் வருகை முதல் நான்கு நாள்களில் கிட்டத்தட்ட நூறு சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையிலான அஜித் படங்களின் தொடக்க வசூலை விவேகம் படம் நிச்சயம் முறியடிக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
பெரும்பாலான மல்டிபிளெக்ஸ்களில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் விவேகம் படம் திரையிடப்பட உள்ளதால் இதன் முதல் நான்கு நாள் வசூல் விவரங்களை அறிந்துகொள்ள தமிழ்த் திரையுலகம் மிகவும் ஆவலாக உள்ளது.
ஆகஸ்ட் 24 முதல் முதல் நான்கு நாள்களுக்குத் திரையரங்குகள் திருவிழா போல காட்சியளிக்கக் கூடும். ஜிஎஸ்டி வரி தொடர்புடைய பிரச்னைகளால் சிறிது காலம் முடங்கிப் போயிருந்த தமிழ்த் திரையுலகுக்கு விவேகம் படம் மறுமலர்ச்சியை ஏற்படுத்தித் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் - விவேகம். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இசை - அனிருத். விவேகம் படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?
விதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!

கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்!

மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: 10 டன் வண்ண மலர்களால் அலங்காரம்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


