மேலும் அவர் கூறியதிலிருந்து; தற்போது பிக் பாஸ் வீட்டிலிருக்கும் பிற போட்டியாளர்களில் சிலரை, தனது ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருவதை, தான் சமூக ஊடகங்களில் கண்டு வருவதாகவும், ரசிகர்களின் அத்தகைய செயல், தனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் வீட்டிலிருக்கையில் அவர்களால்... தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானது உண்மையெனினும் போட்டியிலிருந்து வெளியேறிய பின்; தான் அதைப் பெரிது படுத்த விரும்பவில்லை எனவும், அதனால் தனது ரசிகர்கள் பிற போட்டியாளர்களைக் கடுமையாக விமர்சிப்பது தனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிப்பதாகவும், தயவு செய்து ரசிகர்கள் அவற்றை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ஓவியா தனது ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.