சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

பிரமாண்ட முறையில் நடைபெறவுள்ள மெர்சல் பாடல் வெளியீடு: ஊடகங்களில் நேரலை ஒளிபரப்பு!

சன் டிவியில் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு இந்நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பாகவுள்ளது...

News image
Updated On :18 ஆகஸ்ட் 2017, 5:20 am

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள மெர்சல் படப்பாடல்கள்,வருகிற ஞாயிறு அன்று வெளியிடப்படுகின்றன. மிகவும் பிரமாண்டமுறையில். 

மெர்சல் படப் பாடல் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதுவரை, ஆளப்போறான் தமிழன், நீதானே ஆகிய இரு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன.

ஏ.ஆர். ரஹ்மானின் 25 வருட திரையுலக வாழ்க்கையில் பங்கெடுத்த முக்கிய திரையுலகப் பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளார்கள். நடிகர் விஜய்யிடம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரம்யா ரசிகர்கள் முன்னிலையில் மேடையிலேயே கேள்விகள் கேட்கவுள்ளார்.  

சன் டிவியில் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு இந்நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பாகவுள்ளது. அதேபோல குறிப்பிட்ட பண்பலைவரிசைகளிலும் நேரலை செய்யப்படுகிறது. அதேபோல மெர்சல் ஃபேஸ்புக் பக்கம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

தெறி படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணையும் மெர்சல் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளார்கள். மேலும் சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, கோவை சரளா, சத்யன், யோகி பாபு எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் பங்கேற்றுள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100-வது படம் இது. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிவரும் படம், தீபாவளியன்று வெளிவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.