பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜா, ஹரிஷ் கல்யாணுக்குப் பிறகு மற்றுமொரு புது வரவு போட்டியாளராகக் களமிறங்கியுள்ளார்.
சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன்பு பிரபல நடிகை பிந்து மாதவி போட்டியாளராக உள்ளே நுழைந்தார். அதன்பிறகு புதுவரவாக நடிகை சுஜா களத்தில் குதித்தார். அடுத்தநாளே இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் புதுவரவாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார். சிந்து சமவெளி படத்தில் அறிமுகமானவர், ஹரிஷ் கல்யாண். பொறியாளன், வில் அம்பு போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்றும் ஒரு புதிய போட்டியளார் பிக் பாஸ் களத்திற்குள் நுழைந்துள்ளார். சின்னத்திரையில் கவனம் பெற்றுள்ள நடிகை காஜல் பசுபதி தான் அந்தப் புதிய போட்டியாளர். இவர் முதலில் விஜே-வாகப் பணியாற்றினார். பிறகு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துவருகிறார்.
இவருடைய அறிமுகம் குறித்த வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் ஆரவிடம், உலகமே விரும்புகிற ஒரு பெண்ணை உங்களுக்கு மட்டும் ஏன் பிடிக்கவில்லை என்று கேட்டு அவருக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார் காஜல்.
இதுபோல வெவ்வேறு குணாதியசங்கள் கொண்ட மூன்று பேர் பிக் பாஸ் போட்டியில் நுழைந்திருப்பதால் நிகழ்ச்சி மேலும் சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?
விதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!

கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்!

மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: 10 டன் வண்ண மலர்களால் அலங்காரம்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


