மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் மெர்சல் பாடலின் டீசர்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் மெர்சல் படத்தின் நீ தானே பாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது...

News image
Updated On :17 ஆகஸ்ட் 2017, 6:44 am

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் மெர்சல் படத்தின் நீ தானே பாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முழுப்பாடல் மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது.

தெறி படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணையும் மெர்சல் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளார்கள். மேலும் சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, கோவை சரளா, சத்யன், யோகி பாபு எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் பங்கேற்றுள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100-வது படம் இது. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிவரும் படம், தீபாவளியன்று வெளிவருகிறது.

ஆகஸ்ட் 20 அன்று மெர்சல் பாடல்கள் வெளியிடப்படுகின்றன. அதற்கு முன்னோட்டமாக, ஆளப்போறான் தமிழன் என்கிற பாடல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. 

நீ தானே பாடலை ஏ.ஆர். ரஹ்மான், ஷ்ரேயா கோஷல் ஆகிய இருவரும் பாடியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.