தமிழ் சினிமாவில் புரட்சித்தலைவர், நடிகர் திலகம், நாட்டியப்பேரொளி, சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், இளைய தளபதி, பவர் ஸ்டார், உள்ளிட்ட அடைமொழிகளைப் போலவே தல, சாம்பார், பசு நேசன், காமெடி பெல், முருங்கைக்காய் நடிகர், போன்ற பட்டப்பெயர்களுக்கும் எப்போதும் பஞ்சமே இருந்ததில்லை. நடிகர்களது பெயர்களைக் குறிப்பிடாமல் இந்தப் பட்டப் பெயர்களை மட்டுமே குறிப்பிட்டாலும் கூடப் போதும் ரசிகர்கள் அவர்களை கச்சிதமாக அடையாளம் கண்டு கொள்வார்கள். அந்தளவுக்கு அடைமொழிகளாலும், பட்டப் பெயர்களாலும் நிரம்பி வழிகிறது கோலிவுட்.