கடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

பெண் பத்திரிகையாளர் குறித்து ஆபாச கருத்து: இரு ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு!

பத்திரிகையாளரான தன்யா ராஜேந்திரன், விஜய் நடித்த சுறா படம் குறித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டார்...

News image
Updated On :9 ஆகஸ்ட் 2017, 12:23 pm

பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அவரைப் பற்றி ஆபாசமாக ட்வீட் செய்த இரு ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பத்திரிகையாளரான தன்யா ராஜேந்திரன், விஜய் நடித்த சுறா படம் குறித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டார். விஜய் நடித்த சுறா படத்தை இடைவேளை வரை பார்த்து பிறகு வெளியேறிவிட்டேன். ஆனால் ஜப் ஹாரி மெட் சேஜல் படத்தை இடைவேளை வரைக்கும் கூட பார்க்கமுடியவில்லை என்று ட்வீட் செய்தார். இதற்குக் கண்டனம் தெரிவித்து பலர் தன்யாவுக்கு எதிராக ட்வீட்களை வெளியிட்டார்கள்.

ஆனால் அவ்வகையான ட்வீட்கள்  மோசமாகவும் ஆபாசமான முறையிலும் இருந்தன. இதனால் தன்னுடைய ட்வீட்டை தன்யா பிறகு நீக்கிவிட்டார். ஆனாலும் மோசமான வார்த்தைகளைக் கொண்ட ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி தன்யாவுக்கு எதிரான ஆபாசமான ட்வீட்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டன. 

இதையடுத்து அதுபோன்று ட்வீட் செய்தவர்களுக்குக் கண்டனம் தெரிவித்தும் தன்யாவுக்கு ஆதரவாகவும் பலர் ட்வீட்களை வெளியிட்டு வருகிறார்கள். இதில் நடிகர் விஜய், தனது ரசிகர்களைக் கட்டுப்படுத்தவேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார் தன்யா. தன்னை ஆபாசமாக விமரிசனம் செய்த ஐந்து பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனு தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டார்கள். தன்யா அளித்த புகாரின் பேரில் இரு ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.