சிவகார்த்தியேன் நடித்து வரும் இரு படங்கள் மட்டுமல்லாமல் இன்னும் படப்பிடிப்பு தொடங்காமல் இருக்கும் மற்றொரு படத்தின் தொலைக்காட்சி உரிமையும் விற்கப்பட்டுள்ளன. இது தமிழ்த் திரையுலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது வேலைக்காரன் மற்றும் பொன்ராம் இயக்கும் படம் என இரு படங்களில் நடித்துவருகிறார். இதற்கடுத்ததாக இயக்குநர் விக்னேஷ் சிவனின் படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி பெற்றுள்ளது. இதற்கான அறிவிப்பை சன் டிவி வெளியிட்டுள்ளது. இன்னமும் இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதை உறுதி செய்துள்ளது சன் டிவி.
இதுமட்டுமல்லாமல் சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் தொலைக்காட்சி உரிமையையும் சன் டிவி பெற்றுள்ளது.
பொன்ராம் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் மீண்டும் அவருடைய இயக்கத்தில் நடித்து வருகிறார். 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இசை - இமான். ஒளிப்பதிவு - பாலசுப்ரமணியம், பாடல்கள் - யுகபாரதி. முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் சமந்தா, சிம்ரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்காக சமந்தா சிலம்பம் கற்றுவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி - பிப்ரவரியில் முடிவடையவுள்ளது. ஏப்ரலில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிவகார்த்திகேயனின் 12-வது படம். இதன் தொலைக்காட்சி உரிமையையும் சன் டிவி பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் படம் - வேலைக்காரன். 24ஏம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துவருகிறது. வேலைக்காரன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளது.
இப்படி, சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் இரு படங்கள் மட்டுமல்லாமல் இன்னும் படப்பிடிப்பே தொடங்காத பேச்சுவார்த்தை நிலையில் இருக்கும் படத்தின் தொலைக்காட்சி உரிமையும் விற்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வேறெந்த கதாநாயகனுக்கும் இதுபோன்ற நிலைமை இல்லை. சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்களின் வரவேற்பு அதிகமாக உள்ளதால் அவருடைய படங்களுக்கான உரிமைகளைப் பெற பலத்த போட்டி நடைபெறுகிறது. அதனாலேயே படப்பிடிப்புகூட ஆரம்பமாகாத நிலையில் பட வியாபாரம் தொடங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பல்கலைக்கழக நூற்றாண்டு விழா...

துவரங்குறிச்சி பகுதிகளில் இன்றைய மின் நிறுத்தம் ரத்து

2-ஆவது முறையாக தொழில்முனைவு இலக்கை எட்டிய சென்னை ஐஐடி
தாழையூத்தில் மாணவிக்கு தொல்லை: இளைஞா் கைது
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


