மூன்றுமுறை அஜித்துடன் இணைந்து படம் இயக்கியுள்ள இயக்குநர் சிவா, நான்காவது முறையாகவும் இணையவுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்குமாரின் 25 ஆண்டு கால திரையுலக பயணத்தைக் கொண்டாடும் வகையில், கும்பகோணத்தில் அவரின் ரசிகர்கள் ரூ. 1 லட்சம் செலவில் பைபர் மெழுகினால் செய்யப்பட்ட அஜித் சிலையை உருவாக்கினர். சிலையை ரசிகர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, கும்பகோணம் காந்தியடிகள் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் அஜித்குமார் சிலையை திரைப்பட நடிகர் இமான் அண்ணாச்சி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகை டார்லிங் மற்றும் ஏராளமான அஜித் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
இமான் அண்ணாச்சி பேட்டியளித்ததாவது:
விவேகம் படத்தைத் தயாரித்துள்ள சத்யஜோதி ஃபிலிம்ஸ், அஜித் படத்தில் நடிப்பதற்காக மீண்டும் என்னிடம் கால்ஷீட் கேட்டுள்ளார்கள். இன்னமும் இயக்குநர் சிவாவிடமிருந்து தகவல் வரவில்லை என்று கூறியுள்ளார்.
இதையடுத்து வீரம், வேதாளம், விவேகம் படங்களுக்குப் பிறகு அஜித் - சிவா கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய முதல்வா் ஸ்டாலின்

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு

அண்ணா பல்கலை. இணைப்புக் கல்லூரி அங்கீகார விண்ணப்பங்களுக்கு புதிய விதிகள்

இளம்பெண் பூச்சிமருந்து குடித்து உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


