விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு படங்களை முடித்துவிட்டு மருதநாயகம் படத்தை ஆரம்பிக்கவேண்டும் என்று கமல் அடுத்தடுத்து முக்கியமான வேலைகளைக் கையில் வைத்துள்ளார். இதற்கிடையே பிக் பாஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் என்கிற தகவல் அந்நிகழ்ச்சி மீது புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியதாவது:
ஆமாம். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்குகிறேன். சினிமாவில் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நான் பணியாற்றியதில்லை. அது எப்படி அமையப்போகிறது என்று பார்க்கப்போகிறேன்.
நேரம் ஒரு பிரச்னைதான். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 8 மாதங்களாக நான் சரியான உடற்தகுதியில் இல்லை. தற்போது விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு படங்களை முடிக்க உள்ளேன். இதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளேன். பிக் பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியை சல்மான் அருமையாக செய்துள்ளார்.
இத்தனை ஆண்டு கால அனுபவத்தில் என்னால் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு அறிவுரை சொல்ல முடியும் என எண்ணுகிறேன். எப்படிப் போகிறது என்று பார்க்கலாம். புதிய பாதையில் பயணிப்பது என்பது எப்போதும் சுவாரசியமான விஷயம் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரதமா் மோடியைப் போல பணக்காரா்களுக்கே மம்தா உதவுகிறாா்: ராகுல்

உ.பி.: கங்கை விரைவுச் சாலையை ஏப். 29-இல் திறந்துவைக்கிறாா் பிரதமா்

தோ்தல் பணியில் நோ்மையற்ற நடத்தை: மேற்கு வங்க காவல்துறை அதிகாரிகள் 5 போ் இடைநீக்கம்

1 - 8 வகுப்பு இறுதித் தோ்வு மதிப்பெண்: ஏப். 30-க்குள் பதிவேற்ற உத்தரவு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


