ஏவிஎம்- ன் ‘பக்த பிரகலாதா’ வைப் பார்த்தவர்கள் அந்தக் குழந்தை முகத்தை அத்தனை சீக்கிரம் மறந்து விட வாய்ப்பில்லை. குழந்தை பிரகலாதனாக நடித்தவர் ஆண் குழந்தை அல்ல, அவர் பேபி ரோஜாரமணி. ஆம் ரோஜாரமணி குழந்தை நட்சத்திரமாக நடித்த அந்தப் படம் அக்காலத்தில் மாஸ்டர் பிளாஸ்டர் ஹிட் மட்டுமல்ல அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. அதன்பிறகு பல தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளத் திரைப்படங்களில் ரோஜா ரமணி நடித்தார். பல படங்கள் ஹிட் அடித்தன. ஆனாலும் குறுகிய காலத்தில் திருமணம், குழந்தைகள் என செட்டில் ஆன ரோஜாரமணி திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு பிரபல நடிகைகளுக்குப் பின்னணிக்குரல் கொடுக்கத் தொடங்கி விட்டார். இவரது கணவர் ஒரிய மொழிப் படங்களில் பிரபல இயக்குனர். இவருக்கு தருண் என ஒரு மகனும், அமுல்யா என்றொரு மகளும் உண்டு.