மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எல்ஐகே பட ‘அடாவடி' பாடல் விடியோ வெளியீடு!

எல்ஐகே படத்திலிருந்து புதுப் பாடல் விடியோ வெளியீடு

News image

‘அடாவடி' பாடல் விடியோ - இணையதளம்

Updated On :30 மார்ச் 2026, 3:24 pm

எல்ஐகே படத்தில் இடம்பெற்றுள்ள ‘அடாவடி' பாடல் இன்று (மார்ச் 30) மாலை வெளியிடப்பட்டது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் பெரும் இடைவெளிக்குப்பின் அடுத்ததாக எல்ஐகே என்ற லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதில் கதாநாயகனாக இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனும் முக்கிய கதாபாத்திரங்களில் எஸ். ஜே. சூர்யா, சீமான், க்ரித்தி ஷெட்டி, கௌரி கிஷன், யோகி பாபு, ஷா ரா, மாளவிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

எல்ஐகே படம் வரும் ஏப். 10 உலகெங்கும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ள நிலையில், அப்படத்தில் அனிருத் இசையில் ‘அடாவடி' பாடல் இன்று வெளியிடப்பட்டது.

ரோகேஷ், ஹெய்சென்பெர்க், விக்னேஷ் சிவன் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். தர்மதுரை படத்தில் இடம்பெற்ற ‘மக்க கலங்குதப்பா...’ பாடல் மூலம் பெருவாரியான ரசிகர்களைக் கவர்ந்த நாட்டுப்புற இசைப் பாடகர் மதிச்சியம் பாலா இப்பாடலை பாடியுள்ளார்.

யூடியூப் தளத்தில் வெளியாகி பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள ‘அடாவடி' பாடலின் காணொலியில், விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியின் இரு மகன்களும் சில விநாடிகள் ஆட்டம் போட்டு தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

கானா - ராப் இசையில் ஆங்கில - தமிழ் சொற்கள் கலவையாக இன்றைய ஜென் ஸீ தலைமுறையைக் கவரும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘அடாவடி' பார்வையாளர்கள் பெரும்பாலானோரிடமிருந்து சமூக ஊடகங்களில் நேர்மறை கருத்துகளைப் பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.