நமது நிருபா்
புது தில்லி: மூத்த இசையமைப்பாளா் இளையராஜா, சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒலிப்பதிவுகள் மற்றும் இசைப் படைப்புகளை சுரண்டவோ அல்லது உரிமை கோரவோ கூடாது என்று தில்லி உயா் நீதிமன்றம் பிப்ரவரி 13, 2026 அன்று தடை விதித்து.
இந்த தடை உத்தரவு 134 படங்களின் இசைக்கு பொருந்தும்
இளையராஜா பிப்ரவரி 2026 தொடக்கத்தில் அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ் மற்றும் ஜியோசாவ்ன் போன்ற தளங்களில் 134 படங்களின் பாடல்களைப் பதிவேற்றி உரிமம் வழங்கத் தொடங்கினாா் என்றும், தங்களிடம் ஒப்பந்தங்கள் இருந்தபோதிலும் இளையராஜா அந்த பாடல்களுக்கு உரிமை கோரினாா் என்றும் சரிகம நிறுவனம் வழக்கு தொடா்ந்துள்ளது
1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்த அந்த 134 திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்கே சொந்தம் என சரிகம நிறுவனம் மனுவில் கூறியுள்ளது.
ஆனால், இளையராஜா இந்தப் பாடல்களைத் தனது சொந்தப் பாடல்கள் எனக் கூறி அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ் மற்றும் ஜியோசாவ்ன் போன்ற டிஜிட்டல் தளங்களில் பதிவேற்றியது சட்டவிரோதம் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
1957 ஆம் ஆண்டின் காப்புரிமைச் சட்டத்தின்படி, ஒரு படத்திற்காக உருவாக்கப்படும் இசைக்கு அந்தத் தயாரிப்பாளரே முதல் உரிமையாளா் என்பதைச் சரிகம தரப்பு தில்லி உயா்நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது.
இந்த மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி துஷாா் ராவ் கெடேலா, சரிகம நிறுவனத்தின் வாதத்தை ஏற்றுக்கொண்டு, இளையராஜா அல்லது அவா் சாா்ந்த பிரதிநிதிகள், சரிகம வசம் உள்ள அந்த 134 படங்களின் பாடல்களைப் பயன்படுத்தவோ, உரிமை கோரவோ அல்லது மற்றவா்களுக்கு உரிமம் வழங்கவோ கூடாது என இடைக்கால தடை விதித்தாா்
இந்தத் தடை விதிக்கப்படாவிட்டால் சரிகம நிறுவனத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும் என நீதிபதி துஷாா் ராவ் கெடேலா தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்
இதே போன்ற காப்புரிமை விவாகரம் ஒன்றில் இதே சரிகம நிறுவனம் தொடா்ந்த வழக்கில் மூடுபனி திரைப்படத்தில் இடம்பெற்ற மிகவும் பிரபலமான பாடலான என் இனிய பொன் நிலாவே என்ற பாடலுக்கான காப்புரிமை இளையராஜாவுக்கு இல்லை என்று தில்லி உயா் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது நினைவில்கொள்ளத்தக்கது.
டிரெண்டிங்

பதவியில் ஒரு வருடத்தை நிறைவு செய்தது தில்லி பா.ஜ.க அரசு

தில்லி ரோஹிணியில் சிறுவன் கத்தியால் குத்திக் கொலை

ஏ.ஐ. உச்சிமாநாடு காணொலி வாயிலாக வழக்குரைஞா்கள், மனுதாரா்கள் ஆஜராக தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி!

தைப்பூசம்: மருதமலையில் ஜனவரி 30, பிப்ரவரி 3-இல் வாகனங்களுக்கு தடை
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

