நடிகர்கள் மோகன் லால், பிரபாஸ், அக்ஷய் குமார் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள ’கண்ணப்பா’ திரைப்படத்தின் முதல்நாள் வசூல் எவ்வளவு? என்பதைப் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.
தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனான விஷ்ணு மஞ்சு நடித்துள்ள ‘கண்ணப்பா’ உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை(ஜூன் 27) திரையரங்குகளில் வெளியானது. தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் எனப் பல மொழிகளிலும் ’பான்-இந்தியா’ திரைப்படமாக கண்ணப்பா உருவாக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க ஒரு சிவபக்தர் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருடன் மோகன் லால், பிரபாஸ் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், சரத் குமார், காஜல் அகர்வால் ஆகியோரும் சிறப்புத் தோற்றத்திலும் இளம் நாயகி ப்ரீத்தி முந்தன், நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம், மோகன் பாபு என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே ‘கண்ணப்பா’-இல் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகம் நிலவியது.
இந்த நிலையில், இத்திரைப்படம் வெளியான முதல்நாளில் மட்டும் ரூ. 9 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், வசூல் குறித்த அதிகாரபூர்வ தகவல் படத் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து இன்னும் வெளியிடப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரிசையில் நின்று வாக்களித்த மோகன் லால், சுரேஷ் கோபி!

தள்ளிப்போகும் மோகன் லால் - மம்மூட்டியின் பேட்ரியாட் வெளியீடு!

பாசில் ஜோசப் - அக்ஷய் குமாரின் ராவடி படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வெளியீடு அறிவிப்பு!

ஃபிட்னஸ் ரகசியம் இதுதான்: அக்ஷய் குமார்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


