திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பாகுபலி ஸ்டார்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பாகுபலிக்காக அதன் ஸ்டார்கள் பெற்றுக் கொண்ட சம்பள விவரங்களைப் பாருங்கள்; இது தோராயமானது தானாம். நிஜம் இதைக் காட்டிலும் அதிகமாகவும் இருக்கலாம்;

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:25 pm

சரோஜினி

இந்தியத் திரையுலகில் இது வரை எந்தப்படமும் சாதிக்காத விசயங்களை எல்லாம் பாகுபலி சாதித்து வருகிறது. சுல்தான், டங்கல் படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தது மட்டுமல்ல, மூன்றே நாட்களில் 500 கோடி ரூபாய் வசூல், ஒரு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்துக்காக ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் மூன்றாண்டுகள் பொறுமையாகக் காத்திருக்கச் செய்த அபாரமான சினிமா ரசனை. அது மட்டுமல்ல படம் வெளியாகி இரண்டாவது வாரத்தில் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டி விடக் கூடும் எனும் நம்பிக்கையைத் தந்த முதல் இந்தியப் படம் என்ற பெருமை வேறு!


பாகுபலி முடியும் வரை வரை வேறு எந்தப் படத்திலும் நடிக்க ஆர்வமில்லை என அறிவித்த பட நாயகன். சப்போர்டிங் கதாபாத்திரம் தான் என்றாலும் மொத்த இந்தியாவையும் தங்களைக் குறித்துப் பேச வைத்த கட்டப்பா மற்றும் சிவகாமி தேவி கதாபாத்திரங்கள். தெலுங்கு, தமிழில் கதாநாயகியாக முதலிடத்தைப் பெற்று லட்சோபலட்சம் ரசிகர்களின் அபிமான நடிகையாகி முத்திரை பதித்துக் கொண்டிருந்த தனது திரைப் பயணத்தில் மிக முக்கியமான காலகட்டத்தில் சற்றும் தயங்காமல் முதல் பாகத்தில் கதாநாயகனுக்கு அம்மாவாக நடிக்கத் தைரியமாக முன் வந்த அனுஷ்கா. இப்படி படத்தில் நடித்த நடிகர்களது அர்ப்பணிப்பு உணர்வால் இன்று பாகுபலி ஸ்டார்கள் இந்தியா முழுவதும் பிரபலமாகி விட்டார்கள். இந்தப் படத்துக்காக அந்தந்த நடிகர்கள் பெற்றுக்கொண்ட சம்பளமென ஒரு பட்டியலை  சமீபத்தில் தெலுங்கு மீடியா தளம் ஒன்று பட்டியலிட்டிருந்தது. அதிலிருந்து கிடைத்தை தகவலின் அடிப்படையில்;

பாகுபலிக்காக அதன் ஸ்டார்கள் பெற்றுக் கொண்ட சம்பள விவரங்களைப் பாருங்கள்; இது தோராயமானது தானாம். நிஜம் இதைக் காட்டிலும் அதிகமாகவும் இருக்கலாம்;

பிரபாஸ் (அமரேந்திர பாகுபலி/ மகேந்திர பாகுபலி) இரு வேடங்கள் - 25 கோடி
ராணா டகுபதி (பல்லாள தேவன்)                                                                       - 15 கோடி
அனுஷ்கா (தேவசேனா)                                                                                          -  5 கோடி
ரம்யா கிருஷ்ணன் (சிவகாமி தேவி)                                                                 - 2.5 கோடி
சத்யராஜ் (கட்டப்பா)                                                                                                  - 2.5 கோடி

இந்த சம்பளம் பாகுபலி- 2 க்காக மட்டுமே.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.