பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஏ.ஆர்.ரகுமான் திரைக்கதையில் உருவாகும் '99 சாங்ஸ்' போஸ்டர் வெளியீடு

ஆஸ்கர் விருது பெற்ற தமிழ் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திரைக்கதையில் உருவாகும் '99 சாங்ஸ்' திரைப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :11 மார்ச் 2016, 1:25 pm

ஆஸ்கர் விருது பெற்ற தமிழ் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திரைக்கதையில் உருவாகும்  '99 சாங்ஸ்' திரைப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

ஏ.ஆர். ரகுமான் தனது முகநூல் பக்கத்தில் இப்படத்துக்கான போஸ்டரை வெளியிட்டுள்ளார். உங்களது ஆதரவு மற்றும் ஆசியுடன் எனது படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளேன் என ரகுமான் அதில் குறிப்பிடுள்ளார்.

வானிலிருந்து தொங்கும் பியானோ இசைக் கருவியை பிடித்துக் கொண்டு ஓர் இளைஞரும் தொங்குவதும், அவரது கையைப் பிடித்துக் கொண்டு இளைஞி ஒருவர் தொங்குவது போலவும் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தியால் இயக்கப்படும் '99 சாங்ஸ்'  திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் திரைக்கதை எழுதியுள்ளார். மேலும், அவரே அப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார். ஓர் இசை கலைஞன் தனது வாழ்நாளில் எப்படி போராடி வெல்லுகிறான் என்பதே படத்தின் கதையாகும்.

ரகுமான் வெளியிட்டுள்ள போஸ்டருக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அவருடன் ரங்கீலா, லகான் உள்ளிட்ட திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிய பாலிவுட் நடிகர் ஆமிர் கானும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.