தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

எதிர்பார்த்ததை விட அதிக மதிப்பெண்கள்: லட்சுமி மேனன்

ஒவ்வொரு தேர்விலும் நான் எதிர்பார்த்ததை விடவும் அதிக மதிப்பெண்களே கிடைத்துள்ளது. தேர்வு கடினமாக இருந்தாலும் திருத்தும்போது தாராளமாக இருந்துள்ளார்கள்.

News image
Updated On :28 மே 2015, 10:45 am

+2 தேர்வில் 80% மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்துள்ளார் லட்சுமி மேனன்.

அடுத்து என்ன படிக்கப் போகிறார் என்பதை ஒரு பேட்டியில் கூறியதாவது:

‘எனக்குக் கிடைத்த மதிப்பெண்களால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். ஒவ்வொரு தேர்விலும் நான் எதிர்பார்த்ததை விடவும் அதிக மதிப்பெண்களே கிடைத்துள்ளது. தேர்வு கடினமாக இருந்தாலும் திருத்தும்போது தாராளமாக மதிப்பெண்கள் வழங்கியுள்ளார்கள் என யூகிக்கிறேன்.

பி.காம், ஃபேஷன் டிசைனிங் என இரண்டில் ஒன்று படித்து டிகிரி வாங்கிவிடலாம். ஆனால் நான் ஆங்கில இலக்கியம் படிக்க உள்ளேன். படிப்பு, சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்த இந்தப் படிப்பு உதவும்.  கேரளாவுக்கு வெளியே படிக்க நேர்ந்தால் அந்த ஊர் உணவு ஒத்துப்போவது சிரமம். மேலும் எனக்கு அடிக்கடி வீட்டு ஞாபகம் வேறு வரும். அதனால் கொச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்க உள்ளேன்’ என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.