சமீபத்தில் வெளியான ரோமியோ ஜூலியட், இனிமே இப்படித்தான் போன்ற படங்களுக்கு சென்னை தவிர தமிழகத்தின் பிறபகுதிகளில் வரிவிலக்குடன் திரையிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இடைத்தேர்தல் நடப்பதால் படத் தயாரிப்பாளர்களின் கோரிக்கையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரோமியோ ஜூலியட், இனிமே இப்படித்தான் படங்களை தேர்வுக்குழு பார்வையிட்டு, வரிவிலக்கு அளிப்பதற்குப் பரிந்துரை செய்துள்ளதாகவும் ஆனால், ஆர்.கே.நகர் சட்டமன்றத்துக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளதால் சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களுக்கு தங்கள் படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்குமாறு அப்படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன என்று இப்படங்களின் வரிவிலக்கு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரை இப்படங்களுக்கு கேரிக்கை வரியினை வசூலிக்க இப்படத்தின் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்பட அறிவுறுத்துவதாகவும், மேற்காணும் வகையில் அரசுக்கு கேளிக்கை வரி இழப்பு ஏற்படும் நிலை வந்தால், அத்தொகையைத் தாங்கள் செலுத்துவதாகவும் இரு படங்களின் தயாரிப்பாளர்களும் உறுதி அளித்துள்ளார்கள். எனவே சென்னை மாவட்டம் தவிர இரு படங்களுக்கும் கேளிக்கை வரியிலிருந்து விலக்களித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. புரியாத ஆனந்தம் புதிதாக ஆனந்தம் படத்துக்கும் இதேபோன்றதொரு அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.40% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


