கோச்சடையான் படத்துக்காக கடன் வாங்கியது தொடர்பான பிரச்னையில் லதா ரஜினிகாந்த் மீது பெங்களூரு காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இதனையடுத்து லதா ரஜினிகாந்த் அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அவதூறுகளை லதா ரஜினிகாந்த் சட்டப்படி சந்திக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஆட் பீரோ நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகார் அனைத்தும் பொய்யானவை. கோச்சடையான் கடனுக்காக லதா ரஜினிகாந்த் எந்த ஒரு இடத்திலும் உத்தரவாதக் கையெழுத்துப் போடவில்லை.
அபிர்சந்த் நஹர் மற்றும் அவர் மனைவி சஞ்சல் நஹர் ஆகியோர் கிரிமினல் வழியில் லதா ரஜினிகாந்துக்குப் பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து ஆதாயமடைய கடந்த ஓராண்டாகவே முயற்சி செய்தார்கள். அவர்கள் நெருக்கடிக்கு லதா ரஜினிகாந்த் பணியாததால் மீடியா மூலமாக விஷமத்தனமான பிரசாரம் மேற்கொண்டு பணம் பறிக்க முயற்சி செய்தார்கள். இதனால் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடும் என்பதால், அவரே முன்வந்து வாங்காத கடனை அடைப்பார் எனவும் எதிர்பார்த்தார்கள்.
லதா ரஜினிகாந்த் பெங்களூரு சிவில் நீதிமன்றத்தை அணுகி ஆட் பீரோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவைப் பெற்றார்.
இப்போது தனிநபர் ஒருவர் உள்நோக்கத்துடன் புகார் அளித்துள்ளதை, மாவட்ட நீதிமன்றம் ஏற்று வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்தப் புகாரில் உண்மை நிலை மூடி மறைக்கப்பட்டுள்ளது.
இவர்களின் அவதூறுகளை சட்டப்படி சந்திக்க உள்ளோம். தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அளிக்கப்பட்டிருக்கும் இந்தப் புகாருக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சிவில் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவர்களுக்கு தண்டனை பெற்று தருவார் என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


