நடிகை விஷாகா சிங் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில், டிஷர்ட் அணிந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் Everybody is somebody’s foreigner என்கிற வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ஒருவர் மிக மோசமான முறையில் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கமெண்ட் அடித்தார். வழக்கமாக இதுபோன்ற ஆபாசமான கமெண்ட்களை நடிகைகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். அல்லது நீக்கிவிடுவார்கள். ஆனால் விஷாகா சிங் ஆபாசமாக கமெண்ட் செய்த நபரை ஒரு பிடி பிடித்தார்.
நான் பெண் என்று எனக்குத் தெரியும். ஒரு பொது அறிவு தெரியுமா, உன்னுடைய அம்மா, சகோதரி, மனைவி, பாட்டி, மகள், தோழிகளுக்கு இருப்பதுபோலத்தான் எனக்கும் உள்ளது. இது ஒவ்வொரு பெண்ணுக்கும் இருப்பதுதான். உன்னுடைய அம்மா, சகோதரி, மனைவி, பாட்டி, அத்தை, தோழிகளுக்கும் இது பொருந்தும். அவர்களிடம் போய் இப்படி அசிங்கமாக கமெண்ட் அடிக்க முடியுமா? உனக்காக நான் வருத்தப்படுகிறேன். தைரியம் இருந்தால் என் முன்னால் வந்து சொல். இல்லையென்றால் என்னுடைய பக்கத்தை விட்டு வெளியே செல் என்று பதிலடி கொடுத்தார்.
பிறகு அந்தப் புகைப்படத்தையும் அதனால் உருவான கமெண்ட்கள் அத்தனையும் நீக்கிவிட்டார். தேவையில்லாத எதிர்வினையை உருவாக்கும் என்பதால் அந்த போஸ்ட்டை நீக்கிவிட்டேன் என்று பின்னர் விளக்கம் கொடுத்தார். ( இவர், கண்ணா லட்டு திங்க ஆசையா என்கிற தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.)

விஷாகா சிங்கின் இந்த நடவடிக்கைக்கு திரைத்துறையினர் பலத்த ஆதரவு தெரிவித்துள்ளனர். ‘இத்தகைய கோழைகளை எதிர்கொண்ட விதம் அபாரம். பெண்களின் சக்தியையே இது காட்டுகிறது’ என்று நடிகை த்ரிஷா, விஷாகா சிங்கைப் பாராட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


