கடந்த சில மாதங்களாகவே தனக்கு மோசமான தொலைப்பேசி அழைப்புகள், அச்சுறுத்தல்கள், இணைய வழித் தொந்தரவுகள் இருந்து வருகின்றன. இதற்காக பாதுகாப்பு தரவேண்டும் என கவிஞர் தாமரை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். மேலும் தனக்குத் தொந்தரவு தரும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டனை கொடுக்கும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுபற்றி அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
நான் தற்சமயம் சென்னைப் பெருநகர ஆணையாளர் அலுவலகத்தில் இருக்கிறேன்.
கடந்த சில மாதங்களாகவே எனக்கு மோசமான தொலைபேசி அழைப்புகள், அச்சுறுத்தல்கள், இணைய வழித் தொந்தரவுகள் இருந்து வருகின்றன.
நீண்ட பொறுமைக்குப் பிறகு இன்று வெளிப்படையாகப் புகார் கொடுப்பதென்று முடிவெடுத்தேன்.
தியாகு வீட்டை விட்டு ஓடிய பிறகு, நான் துணிந்து வெளியில் வந்து நியாயம் கேட்டுப் போராடியதன் பின்விளைவுதான் இது. அதாவது சமூகத்தின் பார்வையில் நான் தனியாக இருக்கிறேன் , என்னை எப்படி வேண்டுமானாலும் அணுகலாம் என்கிற வக்கிரமான மனநிலைதான் !. இப்படி என்னை அச்சுறுத்துவதன் மூலம் கணவர்களின் அக்கிரமங்களை எதிர்த்துக் கேள்வி எழுப்பும் அனைத்துப்பெண்களுக்கும் எச்சரிக்கை விடப்படுவதாகவே கருதுகிறேன். இந்த வகை ஆபாச அச்சுறுத்தல்கள் எப்பேர்ப்பட்ட பெண்ணையும் நிலைகுலையச் செய்வது இயல்பே!
இப்படியான நிலை சமூகத்தில் இருப்பதால்தான் பெரும்பாலான பெண்கள் வாய்மூடி மௌனிகளாய் இருக்கிறார்கள்.
என் புகாரில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டனை கொடுத்தால் அது மற்ற பெண்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்று நினைத்தே புகார் கொடுக்கிறேன்.
(எனக்கும் என் மகனுக்கும் பாதுகாப்பு கொடுக்குமாறு காவல்துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


