‘காக்கா முட்டை’ பட சிறுவர்களைக் கட்டிப் பிடித்து பாராட்டிய தோனி!
சாதாரண குடும்பச் சூழலில் இருந்து தேசிய விருது வரை முன்னேறியுள்ள இரண்டு சிறுவர்களையும் கட்டிப்பிடித்துப் பாராட்டினார்.


‘காக்கா முட்டை’ படத்தில் நடித்த சிறுவர்கள் ரமேஷ், விக்னேஷ் ஆகிய இருவருக்கும் நிறைய பாராட்டுகள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே தேசிய விருது அங்கீகாரம் வேறு. இப்போது கூடுதல் சந்தோஷமாக, இருவரும் இந்திய கேப்டன் எம்எஸ் தோனியைச் சந்தித்துள்ளார்கள்.
இருவருக்கும் கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகம், தோனியின் ரசிகர்கள் என்பதால் தேசிய விருது வாங்கியதற்கான பாராட்டாக தோனியுடனான சந்திப்பை ஏற்பாடு செய்தது படத்தை வெளியிட்ட ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம். இயக்குநர் மணிகண்டனுடன் சேர்ந்து மும்பை சென்ற இரண்டு சிறுவர்களும் டிஒய் படேல் மைதானத்தில் தோனியைச் சந்தித்தார்கள்.
படத்தின் சில காட்சிகளையும் டிரையிலரையும் முதலில் பார்த்தார் தோனி. சாதாரண குடும்பச் சூழலில் இருந்து தேசிய விருது வரை முன்னேறியுள்ள இரண்டு சிறுவர்களையும் கட்டிப்பிடித்துப் பாராட்டினார். ஐபிஎல் ஆடுவதற்காக அடிக்கடி சென்னை வருவதால் சப்-டைட்டில் உள்ள தமிழ்ப் படங்களைப் பார்ப்பது வழக்கம் என்று இயக்குநர் மணிகண்டனிடம் தெரிவித்தார் தோனி.
தங்கள் கனவு நாயகன் தோனியைச் சந்தித்தது பற்றி இரு சிறுவர்களும் ஒரு பேட்டியில் கூறியதாவது:
தோனியைச் சந்தித்தது சூப்பரா இருந்துச்சு. எங்களிடம் நல்லாப் பேசினார். கட்டிப் பிடிச்சுப் பாராட்டினார். முதல்ல பேசும்போது தயக்கமா இருந்துச்சு. ஆனா, அவர் எங்ககிட்ட நல்லா பேசினதால சகஜமாயிட்டோம். பெரிய கிரிக்கெட் வீரர் மாதிரி நடந்துக்கலை. வாழ்க்கையில நினைச்சதை சாதிக்கணும்னா எந்தமாதிரி வாழணும்னு ஆலோசனை எல்லாம் கொடுத்தார் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...