மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியிலிருந்து லட்சுமி ராமகிருஷ்ணன் விலகல்!

இதுதொடர்பாக லட்சுமி ராமகிருஷ்ணன் வீடியோ ஒன்றை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

News image
Updated On :1 ஜூன் 2015, 11:12 am

ஜீ தமிழ் ‘சொல்வதெல்லாம் உண்மை’  நிகழ்ச்சியிலிருந்து லட்சுமி ராமகிருஷ்ணன் விலகியுள்ளார். அதனால் இன்றுமுதல் அந்த நிகழ்ச்சிக்குப் புதிய தொகுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

குடும்பப் பிரச்னைகளை அலசும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி பலவிதமான விமரிசனங்களுக்கு மத்தியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சமீபகாலமாக லட்சுமி ராமகிருஷ்ணன்  இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இவருடைய ‘என்னம்மா இப்டி பண்றீங்களேமா’  என்கிற வாக்கியம் முதலில் விஜய் டிவியில் கிண்டல் செய்யப்பட்டது. அதன்பிறகு அது  சினிமா உள்பட பல இடங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இப்போது இந்த நிகழ்ச்சியிலிருந்து லட்சுமி ராமகிருஷ்ணன் விலகியுள்ளார். இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மாற்றம் ஒன்றுதான் மாறாதது இல்லையா! சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் ஒரு மாற்றம். ஜூன் 1 முதல் நான் அந்த நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கப் போவதில்லை. சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி எனக்கு நல்ல அனுபவம். நிறைய பேரின் வாழ்க்கையில் ஒரு சின்ன மாற்றத்தை, நல்ல மாற்றத்தை உண்டாக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கு நான் ஜீ தமிழுக்கு நன்றி சொல்வேன். ஏன் இந்த மாற்றம் என்று பலரும் கேட்கிறார்கள். படங்களில் பிஸியாகிவிட்டேன்.  குடும்பப் பொறுப்புகள் உள்ளன. அதனால் விலகவேண்டிய சூழல் வந்தது என்று கூறியுள்ளார்.

Story image

இப்போது லட்சுமி ராமகிருஷ்ணனுக்குப் பதிலாக நடிகை சுதா சந்திரன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (ஜூன் 1) ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியிலிருந்து அவர் பங்கேற்பார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.