மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

காக்கா முட்டை கதை உருவானது எப்படி?

சில வருடங்களுக்கு முன்னால் என்னால் பிட்சா வாங்க ஆயிரம் ரூபாய் கூட செலவு செய்யமுடியாத நிலை.

News image
Updated On :1 ஜூன் 2015, 6:17 am

பல சர்வதேச விருதுகளை வாங்கியுள்ள காக்கா முட்டை படம், வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகிறது. தமிழ் சினிமாவில் யதார்த்தமான படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். இதனால் இந்தப் படத்துக்கும் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

காக்கா முட்டை டிரெயிலர் பார்க்கும்போது கதை என்ன என்று புரிந்துவிடுகிறது. பிட்சா சாப்பிட ஆசைப்படும் ஏழைச் சிறுவர்களின் கதை தான் காக்கா முட்டை. இந்தப் படத்தின் கதையை எப்படி உருவாக்கினார் இயக்குநர் மணிகண்டன்?

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

சில வருடங்களுக்கு முன்னால் என்னால் பிட்சா வாங்க ஆயிரம் ரூபாய் கூட செலவு செய்யமுடியாத நிலை. ஆனாலும் என் மகனுக்கு எப்படியாவது வாங்கிக் கொடுத்துவிடுவேன். அப்போதுதான் யோசித்தேன். ஏன் குழந்தைகள் பழம் சாப்பிட ஆசைப்படாமால் பிட்சா தான் வேண்டுமென்று அடம்பிடிக்கிறார்கள். விலை மிக அதிகமாக உள்ள பிட்சாவை அடித்தட்டு மக்களின் குழந்தைகள் சாப்பிட்ட நினைத்தால் என்ன ஆகும்? பிட்சா ஆசையைத் தீர்த்துக்கொள்ள அவர்கள் என்ன செய்வார்கள் என்று யோசித்ததுதான் காக்கா முட்டையாக உருவாகியுள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.