மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

அஜீத், விஜய், சூரியா அல்ல நான்: நடிகர் பார்த்திபன் கடிதம்

என் திறமை பேசினாலே விசில் கிடைக்கும் என்பதை நன்கறிந்தவன் நான். வாய்ப்பு கடுகளவு கிடைத்தாலும்...

News image
Updated On :1 ஜூன் 2015, 9:51 am

மாசு என்கிற மாசிலாமணி படத்தில் நடித்துள்ள நடிகர் பார்த்திபன், அந்தப் படத்தில் கிடைத்த அனுபவத்தை முன்வைத்து ஒரு கடிதத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் எழுதியுள்ள வாழ்த்துக் கடித்தத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

நட்சத்திரங்களை விட, அதை கடந்து

அண்டமாய் பார்க்கிறேன் திரை ரசிகர்களை!

நான் யாரையும் அணுகாமல் என்னை அணுகி வரும் வாய்ப்புகளை சிரம் மேற்கொண்டு திறம் பட

அது ரசனையோடு வெளிப்பட முயன்று உழைத்து பயன்படுத்திக்கொள்கிறேன் அப்படி ஒரு சந்தர்ப்பமே ' மாசு'.

ஒவ்வொரு காட்சியை விளக்கும் போதும் "நான் என்றுமே ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு உள்ளானவன் எனவே இன்னும் கொஞ்சம் தீனிப் போடுங்கள் அல்லது " நான் வந்தும் ஒன்னும் புடுங்கலேன்னு ஒருத்தரும் சொல்லிடக்கூடாது"ன்னு ஒரு வரியாவது கோர்த்து சொல்லவா?" என கேட்டு உதடுகளின் இடைவெளியில் விசிலாய் சேர்த்து விடுகிறேன். அதற்கான பலன்...

உலகெங்கிலும் எனக்கு வண்ணமயமாய் வந்து குவியும் பாராட்டுகள்!

அஜித்,vijai, சூரியா அல்லது

Vijai, அஜித், சூரியா அல்லது

சூரியா,அஜித் , vijai அல்ல நான்

வந்து நின்றாலே விசில் அள்ள!

என் திறமை பேசினாலே விசில் கிடைக்கும் என்பதை நன்கறிந்தவன் நான். வாய்ப்பு கடுகளவு கிடைத்தாலும் அதை என்'ணையில் யிட்டு 'படபட'வென பாராட்டாய் தாளித்து விடுகிறேன்.

இப்படத்தில் நான் இருந்தேரவேண்டும் என தீர்மானித்தும், என் சுயசரக்கை அரங்கேற்ற சம்மததும் ஒத்துழைத்த இயக்குனருக்கு நன்றி.

" மேல பாத்தா அண்டனா தான் தெரியும்

அந்தோனி-யா தெரிவான்?" என நான் பேச அதற்கேற்ப நடித்து ஒத்துழைத்த இனிப்பின் சுவை சூரியாவிற்கும் இனிய நன்றி.

மீண்டும் முதல் வரிகள்.

வாக்கியம் நான் முடிக்கும் முன்பே

உதட்டில் விரல் குவித்து விசில் அடிக்கும் அநியாய புத்திசாலி ரசிகர்களின் அடிமை நான்!

*

இந்தக் கடிதத்தை நடிகர் சூர்யா, தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்துள்ளார். இக்கடிதத்துக்குப் பதிலளித்துள்ள சூர்யா, நிச்சயம் உண்மை சார். உங்கள் பணியை மிகவும் விரும்பினேன். எங்களுடன் இணைந்து பணியாற்றியதற்கு மிக்க நன்றி என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.