டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

வசூலில் சாதனை படைக்கும் சல்மான் கான் படம்!

இதற்கு முன்பு ரூ.200 கோடி வசூலித்த சல்மான் கான் படமாக கிக் இருந்தது. அதன் வசூலை...

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:05 am

எழில்

இயக்குநர் கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கரீனா கபூர் போன்றோர்  நடித்துள்ள படம், பஜ்ரங்கி பைஜான். இது, வசூலில் சாதனை படைத்து வருகிறது.

இதுவரை இந்தப் படம் 240 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளது. இரண்டாவது வார இறுதியிலும் இதன் வசூல் கொஞ்சமும் குறையாமல் கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் ரூ. 56 கோடி வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

இதுவரை வெளிவந்த சல்மான் கான் படங்களில் இதுதான் அதிகம் வசூல் செய்த படம். இதற்கு முன்பு ரூ.200 கோடி வசூலித்த சல்மான் கான் படமாக ‘கிக’் இருந்தது. அதன் வசூலை இந்தப் படம் தாண்டியுள்ளது. 2015-ல் அதிகம் வசூலித்த ஹிந்திப் படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது. இது, விரைவில் ரூ. 300 கோடியைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.