தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தனுஷின் மாரி படத்துக்கு அமோக வசூல்! கொண்டாட்டத்தில் படக்குழு!

இதைத் தொடர்ந்து முதல்நாளே படத்தின் வெற்றியை படக்குழுவினரோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார் தனுஷ்....

News image
Updated On :22 ஜூலை 2015, 8:43 am

மாரி படத்துக்குச் சாதகமான விமரிசனங்கள் வராமல் இருக்கலாம். ஆனால், வசூலில் தனுஷுக்கும் தயாரிப்பாளர்களும் அதிக சந்தோஷம் கிடைத்துள்ளது.

கடந்த வெள்ளியன்று ரிலீஸான மாரி, முதல்நாளிலேயே தனுஷுக்குப் பெருமை சேர்த்துவிட்டது. முதல் நாளன்று கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய் வசூல் கிடைத்துள்ளது. இதுவரை வெளியான எந்த ஒரு தனுஷ் படமும் முதல் நாளில் இந்த வசூலைப் பெற்றதில்லை. இதைத் தொடர்ந்து இந்தச் செய்தியைக் கொண்டாடும் விதமாக, படக்குழுவினரோடு இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடினார் தனுஷ்.

Story image

'காதலில் சொதப்புவது எப்படி', 'வாயை மூடி பேசவும்' படங்களுக்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கியுள்ள மூன்றாவது படம் 'மாரி'. இதில் தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ சங்கர், விஜய் யேசுதாஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு; அனிருத் இசை. சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

முதல் மூன்று நாள்களில் ரூ. 20 கோடி வரை வசூல் கிடைத்துள்ளது. வெளிநாட்டில் மட்டும் ரூ. 10 கோடி! இதுவும் தனுஷ் படங்களில் ஒரு சாதனையாக உள்ளது.

ட்விட்டர் வழியாக, தனக்கு அதிக ஓபனிங் அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் தனுஷ். தயாரிப்பாளர்களில் ஒருவரான சரத்குமாரும் தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டுள்ளார். படத்தில் பணியாற்றிய முக்கியமான கலைஞர்களுக்குத் தங்கச் சங்கிலியைப் பரிசாக அளித்துள்ளார் தனுஷ்.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.