தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

எம்.எஸ்.வி. பாடல்களில் உள்ள இசை நுணுக்கங்களை வெளிப்படுத்துவேன்: இசை நிகழ்ச்சி பற்றி இளையராஜா

எவ்வளவு பெரிய உயர்வான விஷயங்களை எப்படி சர்வசாதாரணமாக செய்து காட்டியிருக்கிறார் என்பதை தெரியப்படுத்தப் போகிறேன்.

News image
Updated On :21 ஜூலை 2015, 7:02 am

மறைந்த ‘மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதனின் நினைவைப் போற்றும் வகையில், இசையமைப்பாளர் இளையராஜா தலைமையில் சென்னையில் வருகிற 27-ம் தேதி இசை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

சென்னை காமராஜர் அரங்கத்தில் திங்கள்கிழமை (ஜூலை 27) மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த இசை அஞ்சலி நிகழ்ச்சியில், இளையராஜாவின் குழுவினர், எம்.எஸ்.விஸ்வநாதனின் சாகாவரம் பெற்ற பாடல்களை இசைத்துப் பாடுகிறார்கள்.

எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைக் குழுவில் பணிபுரிந்த பல்வேறு இசைக் கலைஞர்களும் இதில் கலந்துகொண்டு அவருக்கு இசை அஞ்சலி செலுத்துகிறார்கள். பின்னணிப் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி, சித்ரா உள்ளிட்டோரும், இளம் தலைமுறைப் பாடகர்களும் பங்கேற்று எம்.எஸ்.விஸ்வநாதனின் அழியாப் புகழ்பெற்ற பாடல்களைப் பாடவுள்ளார்கள். சுமார் 3 மணி நேரம் நடைபெற உள்ள இந்த இசை அஞ்சலியில் 25 பாடல்கள் அரங்கேறவுள்ளன. இந்த நிகழ்ச்சிக்கான ஒத்திகை கடந்த சில நாள்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சி பற்றி இளையரஜா கூறும்போது,

‘திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணனின் இசைத்திறமையும், ஆளுமையும் அனைவரும் அறிந்ததே. அவரின் இந்த இசை நுணுக்கங்களை நான் அறிந்த அளவுக்கு வேறு யாரும் அறிந்திருக்க மாட்டார்கள் இந்த இசை நுணுக்கங்களையெல்லாம் எல்லோருக்கும் வெளிப்படுத்த உள்ளேன். எவ்வளவு பெரிய உயர்வான விஷயங்களை எப்படி சர்வசாதாரணமாக செய்து காட்டியிருக்கிறார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தப் போகிறேன். இசையில் ஒவ்வொருவருடைய கற்பனையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். நம் உயிரை  எங்கோ அழைத்துச்செல்கின்ற உணர்வைக் கொண்டுவருவது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. இதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். இதை மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என்பதால் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன். அவர் உடலை விட்டு உயிர் பிரிந்து சென்றாலும் அவர் என்றும் மறையாத நித்ய சொரூபர். எம்.எஸ்.வி.யின் இசைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி இருக்கும்.’” என்றார்.

இந்த இசை நிகழ்ச்சி, ஜீவா - இளையராஜா கல்வி அறக்கட்டளை சார்பாக நடத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.