படம் வெளியாகும் நாளிலேயே 180 ரூபாய் பணம் செலுத்தி டவுன்லோட் செய்து பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உடனே, புலி, விஸ்வரூபம் 2 படங்களையெல்லாம் அப்படிப் பார்த்துவிடலாம் என்று மனக்கோட்டை கட்டவேண்டாம். இந்த வசதியெல்லாம் மலையாளப் படங்களுக்குத்தான்!
டிவிடி உரிமத்தில் மற்ற தென்னிந்திய மொழிகளை விடவும் முன்னணியில் இருக்கும் மலையாள சினிமா இப்போது இன்னொரு புதுமையைக் கொண்டுவந்துள்ளது. படம் வெளியான நாளே இணையத்தில் அதிகாரபூர்வமாக டவுன்லோட் செய்து பார்க்கும் வசதியை உருவாக்கியுள்ளது.
கொச்சியைச் சேர்ந்த பிளைஸ் க்ரோலி, விவேக் பால், கவுதம் வியாஸ் ஆகிய மூன்று கொச்சி இளைஞர்களின் Xincoz Labs நிறுவனம் உருவாக்கியுள்ள இணையத்தளம், Reelmonk.com. இந்த இணையத்தளம் மூலமாக மலையாளப் படங்களை வெளியாகும் தினத்தன்றே பார்க்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளார்கள். ரூ.180 கொடுத்தால் சாதாரண பிரதியை டவன்லோட் செய்து பார்க்கமுடியும். பளிங்கு போன்ற துல்லியமான பிரதியை (High definition print) டவுன்லோட் செய்ய ரூ. 300 செலுத்தவேண்டும்.
ஜூலை 20 அன்று 15 படங்களை ரசிகர்கள் டவுன்லோட் செய்து பார்க்கலாம். இதில் லால் ஜோஸ் இயக்கிய Nee-Na படமும் ராஜீவ் ரவி இயக்கிய 'Njan Steve Lopez' படங்களும் அடங்கும். படங்கள் முறையாகக் கிடைக்காதபோதுதான் திருட்டு டிவிடி வெளியே வரும். வாங்கக்கூடிய விலையில் ஒரிஜினல் டிவிடியே அல்லது டவுன்லோட் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்போது அங்கு திருட்டு டிவிடிக்கு வேலை இருக்காது என்கிறார் ரீல்மான்க் இணையத்தளத்தைச் சேர்ந்த க்ரோலி. இதன்மூலம் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் மலையாளப் படங்களை ரிலீஸாகும் தினத்தன்றே பார்க்கமுடியும். இதனால் படத் தயாரிப்பாளர்களுக்கும் கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. டவுன்லோட் செய்வதன் மூலமாக கிடைக்கும் வருமானத்தில் 70:30 என்கிற விகிதத்தில் இரு தரப்பினரும் பகிர்ந்துகொள்ள உள்ளார்கள்.
ஒரு படத்தை ஒருநாளில் எத்தனை பேர் டவுட்லோட் செய்கிறார்கள் என்கிற விவரத்தைப் படத் தயாரிப்பாளர்களால் அறிந்துகொள்ளமுடியும். புதுப்படம் டவுன்லோட் செய்யப்படுவதால் இதன்மூலமாக திருட்டு டிவிடி மேலும் பரவும் என யாரும் பயப்படத் தேவையில்லை. ஒரு படத்தை எந்த கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்கிறீர்களோ அதில் மட்டும் படத்தைப் பார்க்கமுடியும். எத்தனை தடவை வேண்டுமானாலும் ஆனால் அதை டிவிடியிலும் பென் டிரைவிலும் காப்பி பண்ணமுடியாது. இதனால் எந்தவித பயமும் இன்றி படத் தயாரிப்பாளர்கள் இந்த முயற்சிக்கு ஆதரவு தரவேண்டும் என்கிற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் 25 லட்சம் கேரள மக்கள் வசிப்பதாகக் கணிக்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளார்கள். நீ-நா படத்தை ரீல்மான்க் இணையத்தளத்தில் வெளியிட ஒப்புக்கொண்டது பற்றி இயக்குநர் ஜோஸ் கூறும்போது, அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் குறிப்பிட்ட சில நாடுகளில் உள்ளவர்கள் நீ-நா படத்தை ரிலீஸான நாளன்றே டவுன்லோட் செய்து பார்க்கமுடியும். சமீபத்தில் ஐரோப்பாவில் சுற்றுப் பயணம் செய்தபோது, மலையாளிகள் பலரும் புதிய படங்களை உடனே பார்க்கமுடிவதில்லை என்று புகார் தெரிவித்தார்கள். இதனால் திருட்டு டிவிடி வழியாகவும் அல்லது திருட்டுத்தனமாக இணையத்தளங்களில் டவுன்ட்லோட் செய்தும் பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார்கள். இதனால் தான் ஒரு படத்தை முதல்நாளே முறையாக டவுன்ட்லோட் செய்து பார்க்கும் வசதியை நான் ஆதரிக்கிறேன் என்றார்.
இந்த விஷயத்தில் தமிழ் சினிமாவுக்கு முன்னோடியாக உள்ளது மலையாளத் திரையுலகம். தமிழ் சினிமாவின் ஒரிஜினல் டிவிடிகள் மிகத்தாமதமாகத் கிடைப்பதால்தான் திருட்டு டிவிடி வழியாக படத்தைப் பார்த்துவிடுகிறார்கள் ரசிகர்கள். உதாரணமாக இப்போது காக்கா முட்டை படம் எந்த ஒரு திரையரங்கிலும் ஓடுவதில்லை. இப்போது அந்தப் படத்தைப் பார்க்க நினைப்பவர்களுக்கு என்ன வசதி உள்ளது? அதன் ஒரிஜினல் டிவிடி இன்னமும் வெளியிடப்படவில்லை. இதனால் முறைகேடாக டவுன்லோட் செய்து பார்க்கும் நிலைமைக்கு ரசிகர்கள் தள்ளப்படுகிறார்கள். மலையாளப் படங்கள் போல படம் வெளியான நாளே முறையாக டவுன்லோட் செய்து பார்க்கும் வசதி தமிழ் ரசிகர்களுக்கும் ஏற்படுத்தித் தரப்படுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெளிநாடுகளிலிருந்து வந்த வாக்காளா்கள்

அடிப்படை வசதிகள் இல்லாத வாக்குச்சாவடி: வாக்காளா்கள் அதிருப்தி

துத்துக்குடியில் முதல்முறை வாக்காளா்கள் உற்சாகம்

தூத்துக்குடியில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமக்கள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


