தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நடிகர் சூரிக்கு சீமான் பிறந்த நாள் வாழ்த்து!

நாகேஷ், கலைவாணர், சந்திரபாபு வரிசையில் தன்னை மெய்ப்பித்து வருகிறார் சூரி.

Updated On :27 ஆகஸ்ட் 2015, 5:45 am

நடிகர் சூரியின் பிறந்த நாளுக்கு (27.8.15) வாழ்த்து தெரிவித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், சீமான் கூறியிருப்பதாவது:

நகைச்சுவை நடிப்பில் தனி முத்திரைப் பதித்திருக்கும் தம்பி சூரி, தமிழ் மண்ணின் பெருமைமிகு கலைஞன். வட்டார வாழ்வியலையும் தமிழ் மண்ணின் வழக்கங்களையும் நகைச்சுவை ததும்ப வைக்கும் உடல் மொழியில் வெளிப்படுத்தி, தமிழ் மண்ணின் தவிர்க்க முடியாத பெருங்கலைஞனாகத் தன்னை நிரூபித்து வருகிறார் தம்பி சூரி. கிராமத்து வாழ்வியலையும் குறும்புகளையும் அட்டகாசமான மொழி நடையில் வெளிப்படுத்தி, மாபெரும் நகைச்சுவைக் கலைஞர்களாக வலம்வந்த நாகேஷ், கலைவாணர், சந்திரபாபு வரிசையில் தன்னை மெய்ப்பித்து வருகிறார் சூரி. மண்ணின் கலைஞனாகத் தன்னை நிலைநிறுத்தி இருக்கும் தம்பி சூரிக்கு நாம் தமிழர் கட்சி மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. 

நாடகக் காலம் தொட்டே நகைச்சுவைக் கலைஞர்களின் ஊடாகவே சுதந்தரம் தொடங்கி சுரண்டல் வரையிலான அத்தனை பிரச்னைகளும் மக்களின் கவனத்துக்குச் சென்றிருக்கின்றன. மாபெரும் சர்வாதிகாரி ஹிட்லரையே தனது நகைச்சுவை திறமையால் சதுரம் நடுங்க வைத்தார் சார்லி சாப்ளின். அந்த விதத்தில் நாட்டின் நல்லது கெட்டதுகளை மக்களின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் ஆகப்பெரும் கடமை நகைச்சுவை கலைஞர்களுக்கு இருக்கிறது. தம்பி சூரி தமிழ்க் கலாசாரத்தின் அடையாளமாகவும், தமிழ் வாழ்வியலின் அப்பட்டமான சாட்சியாகவும் ஒவ்வொரு படத்திலும் தன்னை நிரூபித்து வருகிறார். மூன்றாம் தமிழின் அரிய கலைஞனாக, மக்களின் சோகங்களை மறக்க வைக்கும் நகைச்சுவை மன்னனாக விளங்கும் தம்பி சூரி, தமிழ் மண்ணின் அரிய சொத்து. வளைந்து நெளியும்  உடல்மொழியும் அருமையான வட்டார மொழியுமாய் ரசிகர்களைக் கவர்ந்திருக்கும் சூரி, தமிழ்த் திரையுலகில் இன்னும் வியக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்தி தமிழ் மக்களைக் குளிர்விக்க நாம் தமிழர் கட்சி வாழ்த்துகிறது.

திரைத்துறைத் திறமையிலும் தனிப்பட்ட குணத்திலும் தன்னை ஆகச்சிறந்தவராக நிரூபித்து லட்சக்கணக்கான தமிழ் ரசிகர்களை ஈர்த்து இதயக்கூட்டில் வைத்திருக்கும் சூரி, தமிழ் மண்ணுக்கான நகைச்சுவை அடையாளமாகக் காலம் முழுக்கத் தன்னை நிரூபிக்க வேண்டும். அதற்கான பக்க பலமாக, ஒருமித்த தமிழ் மக்களின் உணர்வுமிக்க ஆதரவாக  நாம் தமிழர் கட்சி எந்நாளும் விளங்கும்.


இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.