தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஷ்ரேயா கோஷலுக்கு எதிராகப் பேசினாரா சித்ரா? அவர் பேசியது என்ன?

கேரளாவில் மற்ற மொழிப் பாடகர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு போல, கேரளப் பாடகர்களுக்கு மற்ற மாநிலங்களில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை...

News image
Updated On :26 ஆகஸ்ட் 2015, 6:31 am

மலையாளத் திரையுலகத்தில் ஸ்ரேயா கோஷலுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்று பாடகி சித்ரா பேசியதாக நேற்று இணையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ் சினிமாவில் நீண்டகாலமாகப் பாடிவரும் சித்ரா இப்படிப் பேசலாமா என்று பலர் அதிருப்தியுடன் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்தார்கள்.

உண்மையில் சித்ரா இதுபற்றி என்ன பேசினார்?

கேரள சுற்றுலாத்துறை சார்பாக திருவனந்தபுரத்தில் ஓணம் பண்டிகைக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் சித்ரா கலந்துகொண்டார். அவரிடம் மலையாளத் திரையுலகில் மற்ற மொழிப் பாடகர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த சித்ரா, ஸ்ரேயா கோஷல் போன்ற திறமையான பாடகிக்கு மலையாளப் படங்களில் வாய்ப்பு கொடுத்தால் யாரும் புகார் சொல்லமாட்டார்கள். அதேசமயம், கேரளாவில் உள்ள திறமையான பாடகர்களுக்கும் சம அளவில் வாய்ப்பளிக்கவேண்டும். உண்மையில் கேரளாவில் மற்ற மொழிப் பாடகர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு போல, கேரளப் பாடகர்களுக்கு மற்ற மாநிலங்களில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.