150-வது படத்துக்குத் தயாராகும் சிரஞ்சீவி!
தாகூர் படப் புகழ் வி.வி. வினாயக் சமீபத்தில் சிரஞ்சீவியைச் சந்தித்து கதை ஒன்றை சொல்லியிருக்கிறார்.


சிரஞ்சீவி தனது 150-வது படத்துக்குத் தயாராகி வருகிறார்.
சிலமாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட படமான ஆட்டோ ஜானி , சிரஞ்சீவியின்150-வது படம் எனச் சொல்லப்பட்டது. அந்தப் படத்தை பூரி ஜகன்னாத் இயக்குவதாகவும் இருந்தது. ஆனால், பிறகு அந்தப் படம் நிறுத்தப்பட்டது.
இது பற்றி சிரஞ்சீவில் தரப்பில் கூறியதாவது: சிரஞ்சீவி ஒரேடியாக இந்தப் படத்தைக் கைவிடவில்லை. பூரி ஜகன்னாத் சொன்ன கதையின் இரண்டாம் பகுதி அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அது அப்படியே நிறுத்தப்பட்டது. இப்போது மேலும் சில கதைகளைக் கேட்டு வருகிறார். அதில் நிச்சயம் ஒன்றைத் தேர்வு செய்வார். தாகூர் படப் புகழ் வி.வி. வினாயக் சமீபத்தில் சிரஞ்சீவியைச் சந்தித்து கதை ஒன்றை சொல்லியிருக்கிறார். இது சாத்தியமானால் விரைவில் படம் தொடங்கப்படலாம் என்று தெரிவித்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...