ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே நடிக்கும் படத்துக்கு கபாலி என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்தகவலை இயக்குநர் ரஞ்சித் நேற்று அறிவித்தார். இந்நிலையில், கபாலி படத்தின் தலைப்பில் சர்ச்சை உருவாகியுள்ளது.
ஏற்கெனவே புதுமுகங்களைக் கொண்டு கபாலி என்றொரு படம் உருவாகி வருகிறது. 2012-ல் இதன் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றுள்ளது. இந்தப் படத்தைத் தயாரிக்கும் சிவா பிக்சர்ஸ் தரப்பில் கூறும்போது: இன்னும் 6 நாள்களில் படப்பிடிப்பு முடிந்துவிடும். இந்த நிலையில் ரஜினி படத்துக்கும் கபாலி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 6 மாத காலமாக தலைப்பைப் புதுப்பிக்க முயற்சி செய்தபோது தேர்தல் வேலை இருப்பதாக அலைக்கழித்தார்கள் என்று தெரிவித்தார்கள்.
கில்ட், பிலிம் சேம்பர், தயாரிப்பாளர் சங்கம் என மூன்று இடங்களில் ஒரு படத்தின் தலைப்பைப் பதிவு செய்யலாம். புதுப்பிக்கலாம். கபாலி படத்தலைப்பை சிவா பிக்சர்ஸ் தயாரிப்பாளர் சிவக்குமார் புதுப்பிக்காமல் போனதால் தயாரிப்பாளர் வி. தாணு வி. கிரியேசன்ஸ் சார்பில் பதிவு செய்துவிட்டார். அதுதான் புதுச்சிக்கலை உருவாக்கியுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் கபாலி என்கிற தலைப்பை அறிவித்துவிட்டதால் அதை இனி மாற்றமுடியாது. எனவே ரஜினி ரசிகர்களுக்காக தயாரிப்பாளர் சிவக்குமார் தனது படத்தின் தலைப்பை மாற்றவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் கபாலி என்கிற தலைப்பை வைத்து இசைவெளியீட்டு விழா வரை நடத்தி முடித்தபிறகு எப்படி மாற்றமுடியும் என்று சிவா பிக்சர்ஸ் சார்பில் சொல்லப்படுகிறது.
ஆனால், கபாலி தலைப்பைப் புதுப்பிக்காதது சிவக்குமாரின் தவறு என்பதாலும் பதிவு செய்யாத ஒரு தலைப்பைத்தான் ரஞ்சித் தேர்ந்தெடுத்துள்ளார் என்பதாலும் இனி கபாலி என்கிற தலைப்பு ரஜினி படத்துக்கானது என்றே சொல்கிறார்கள். மேலும் புதுமுகங்கள் நடிக்கும் படம் என்பதால் படத்தலைப்பை மாற்றினால் பெரிய பாதிப்பு வராது என்பதால் இனியும் கபாலி தலைப்பு தொடர்பாக புதிதாக சர்ச்சைகள் எதுவும் எழாது என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா? பாஜக கோரிக்கையும் காங்கிரஸ் கிண்டலும்!
கதாநாயகனாகும் சாய் அபயங்கர்?

சிஎஸ்கேவின் வரலாற்று வெற்றியை முகேஷ் சௌதரிக்குச் சமர்ப்பித்த கேப்டன் ருதுராஜ்!

மூன்றாவது நாளாகக் குறைந்த தங்கம் விலை: வெள்ளி?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


