/

வெற்றிகரமாக 50-வது வாரத்தைக் கடந்த குஜராத்தி படம்!

இதனால் குஜராத்தி சினிமாவுக்குப் பெருமை கிடைத்துள்ளது என்றார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:24 am

எழில்

அபிஷேக் ஜெயின் இயக்கியுள்ள பே யார் (Bey Yaar) என்கிற நகர்ப்புறக் கதையைக் கொண்ட குஜராத்தி படம், தனது வெற்றிகரமான 50 வாரத்தைப் பூர்த்தி செய்துள்ளது.

இந்தப் படம் இந்தியாவில் மட்டுமில்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என வெளிநாடுகளிலும் நன்றாக ஓடி அதிகக் கவனம் பெற்றுள்ளது.

இதுபற்றி இயக்குநர் அபிஷேக் கூறும்போது: குஜராத்தி மக்களுக்கு நன்றி. அவர்கள்தான் இந்தப் படத்தைப் பற்றி நல்லவிதமாக செய்திகளைப் பரப்பினார்கள். இதனால் குஜராத்தி சினிமாவுக்குப் பெருமை கிடைத்துள்ளது என்றார்.

பே யார் படத்தில் தர்ஷன் ஜரிவாலா, மனோஜ் ஜோஷி, ப்ரதிக் காந்தி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.