டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தமிழ்நாட்டிற்கு உரிய பங்கீடு வழங்கப்படவில்லை: பட்ஜெட் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டிற்கு உரிய பங்கீடு வழங்கப்படவில்லை என்று பட்ஜெட் குறித்து தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

News image
அமைச்சர் தங்கம் தென்னரசு.
Updated On :1 பிப்ரவரி 2026, 10:06 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாட்டிற்கு உரிய பங்கீடு வழங்கப்படவில்லை என்று பட்ஜெட் குறித்து தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, 2026 மத்திய பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தொழில்துறை முதலீடு போன்ற முக்கிய துறைகளுக்கு எந்தத் தெளிவான அறிவிப்புகளும் இடம்பெறவில்லை. பல அண்டுகளாக தமிழக மக்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கீடு வழங்கப்படவில்லை. தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை முற்றிலும் புறக்கணித்த பட்ஜெட்டாகவே உள்ளது. மாற்றத்தை நோக்கியிருந்த மக்களுக்கு கிடைத்திருப்பது ஏமாற்றம் மட்டுமே. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

2026- 27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று(பிப். 1) தாக்கல் செய்தார். தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரிதாக எந்த அறிவிப்பும் இல்லை.

summary

TN Finance Minister Thangam Thennarasu has said regarding the budget that Tamil Nadu has not been given its due share.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.