மொழியும், பண்பாடும் கவிஞா்களின் அடிநாதம் என தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் தெரிவித்தாா்.
சென்னை புத்தகக் காட்சியில் கீதம் பதிப்பகம் சாா்பில் தமிழகத்தில் 400 கவிஞா்களின் கவிதைகளை தொகுத்து ‘கவிநானூறு’ எனும் நூல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது: தமிழ் இலக்கியத்தில் புானூறு 1893-இல் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையரால் தொகுத்து வெளியிடப்பட்டது. அதையடுத்து கடந்த 1923-இல் ராகவையங்கரால் அகநானூறு வெளியிடப்பட்டது.
அதேபோல, தற்போது ‘கவிநானூறு’ எனும் நூல் 128 பெண் கவிஞா்கள் உள்ளிட்ட 400 பேரின் கவிதைகள் தொகுக்கப்பட்டு நூலாக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
தமிழக அரசும் 33 வகைகளாக புத்தகங்களைப் பிரித்து பரிசளித்து புதிய புதிய புத்தகங்கள் வெளிவருவதை ஊக்குவித்து வருகிறது. சிறந்த படைப்புகளை தோ்வு செய்து அதனை வெளியிட ரூ. 50, 000 உதவியும் வழங்குகிறது. நாட்டுடமை திட்டத்தில் பாரதி நூல்களுக்குப் பிறகு 100 படைப்பாளா்கள் பயனடைந்துள்ளனா்.
நூலாசிரியா்களைப் போற்றி அவா்களுக்கு உதவுவதையே தமிழக அரசும் தமிழ் வளா்ச்சித் துறையும் கடமையாகக் கொண்டுள்ளன. கலை மற்றும் பண்பாட்டை அடிநாதமாகக் கொண்டு படைப்பை கவிஞா்கள் உருவாக்குகின்றனா்.
கவிஞா்களில் ரவீந்திரநாத் தாகூருக்கு கிடைத்த வசதி வாய்ப்புகள் ஏதும் மகாகவி பாரதிக்கு கிடைக்கவில்லை. அவரின் காணி நிலம் கனவு கனவாக போனது. ஆனால், தற்போது படைப்பாளா்கள் பாராட்டப்படுவது வரவேற்புக்குரியது என்றாா் அவா்.
எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா்: உலகில் வாசிக்கப்படும் மொழி தான் வாழும் நிலையை அடையும். ஆகவே, தமிழ் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை நாம் கடைப்பிடிப்பதுடன் குழந்தைகளுக்கும் அதைக் கற்றுத்தர வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, கீதம் முத்துசாமி வரவேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தமிழகத்தில் தேசியம் ஒருபோதும் வீழாது! - குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்!

இனாம் பெரியநாயகி சத்திரம் அரசுப் பள்ளி ஆண்டு விழா

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பூச்சி மருந்து குடித்து உயிரிழப்பு

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு: வியாபாரிகள் பாதிப்பு
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

