தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கண்களை வலுப்படுத்தும் வழிகள்!

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் கரும்பலகையில் எழுத்துகள் தெரியவில்லை என்பதை வகுப்பாசிரியர்

News image
Updated On :24 நவம்பர் 2016, 5:13 am

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

எனது மகன் 6 மாதக் குழந்தையாக இருந்தபோது,  சிறுஅம்மை போட்டிருந்தது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் கரும்பலகையில் எழுத்துகள் தெரியவில்லை என்பதை வகுப்பாசிரியர் மூலம் அறிந்து கண் பரிசோதனை செய்ததில், கண் பாப்பாவிற்கும் விழித்திரைக்கும் இடைப்பட்ட நரம்பில் கோளாறு இருப்பதை அறிய முடிந்தது. இருமாத அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் தற்போது பார்வை குறையாமலும், முழுமை பெறாமலும் உள்ளது. இதற்கு ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?

-பிச்சைமுத்து,
சின்னமணலி,
நாமக்கல் மாவட்டம்.

ஆலோசக பித்தம் என்ற ஒரு பித்தம் கண் பார்வைக்காக செயல்படுவதாக ஆயுர்வேதம் கூறுகிறது. கண்ணினுள்ளே கடைசிப் படலத்தில் இருக்கும் ஒளியைக் காட்டும் ஸ்படிகக் கண்ணாடி போன்ற வஸ்துவில் இருப்பது தான் இந்த ஆலோசக பித்தம். வெளியிலிருக்கும் பொருட்களின் கிரணங்கள் கண் துவாரம் வழியே ஊடுருவி இதன்மேல் விழுந்ததும் பிரதிபலிக்கச் செய்து பொருட்களின் உருவத்தைப் பற்றிய அறிவை உண்டு பண்ண உதவுகிறது. கண் நன்றாக இருக்க ஒவ்வொரு நாளும் 6 மணி நேரம் தூங்க வேண்டும். கண்களுக்குப் போதிய அளவு ஓய்வு கொடுக்க வேண்டும். தினசரி பகலில் பத்து நிமிடம் உள்ளங்கையினுள் கண்ணைப் பொத்திக் கொண்டிருந்து, பயிற்சி செய்ய வேண்டும்.

சௌகரியமாக உட்கார்ந்து கொண்டு கண்ணை மூடி, உள்ளங்கையைக் குவித்து, கண்ணையே அமுக்காமல், வலது உள்ளங்கையினால் இடது கண்ணையும் இடது உள்ளங்கையினால் வலது கண்ணையும் பொத்த வேண்டும். பிறகு முழங்கையை முழங்கால் மேலே ஊன்றிக் கொண்டு கருநிறமுள்ள ஒன்றைப் பார்க்க பிரயாசைப்படுங்கள். எவ்வளவு கறுப்பாகத் தெரிகிறதோ, கண்ணிற்கு அவ்வளவும் நல்லது.

குளிர்ந்த தண்ணீர் கண்ணிற்குச் சுகம். முகம் கழுவுகிறபோதெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு உள்ளங்கையிலே கொஞ்சம் தண்ணீரை அள்ளி கண் மேலே அடிப்பது மிகவும் நல்லது. இப்படி ஐந்தாறு தடவை செய்ய வேண்டும். இதனால் கண்ணுக்குத் தெளிவும், பிரகாசமும் உண்டாகும். கண் தசைகளை வருடிப் பிடித்தல் நல்ல பயிற்சியாகும். நம் விரல்களின் நுனியைக் கண்களை மூடிக்கொண்டு இமைகளில் வைத்து மெதுவாக இடது புறமும்,வலது புறமுமாகத் தடவி வர வேண்டும். அப்படியே மேலும் கீழுமாகவும், சுற்றிச் சுற்றியும் தடவிக் கொண்டிருக்கவும். இரண்டு நிமிட இப்பயிற்சியால் கண்களின் இரத்த ஓட்டம் சரியாகிவிடும். கண்களும் பிரகாசமாக ஜொலிக்கும். சுத்தமான நீரில் கண்களைக் கழுவி வர வேண்டியது மிகவும் அவசியம்.

இப்பேர்ப்பட்ட உறுப்பைப் பாதுகாத்துக் கொள்ள மிகச் சுருக்கமாக அகஸ்தியர் கீழ்க்கண்ட செய்யுளை அருளியுள்ளார்:

தின்னார் பண்ணைச் சிறுகீரை தனின்  மறந்தார் சீர்கேடாய்
பொன்னாங் காணிக் கறிகூட்டார் பூசார்பாதம் நெய்யுண்ணார்
பண்ணார் மதியந் தனைப்பாரார் பால்வார்த்துண்ணார் பல்தேயார்
கண்ணார் நோயால் கவல்வர் அதை யாமும் சொல்லக் கடவோமே

பண்ணைக்கீரை, சிறுகீரை இவற்றை  வேண்டிய அளவு உட்கொள்ள வேண்டும். இவற்றை சாப்பிட மறக்கக் கூடாது. பொன்னாங்காணிக் கீரையைப் புளி சேர்க்காமல் கறியாகச் சமைத்துச் சாப்பிடவும். இரவு நேரங்களில் இரு உள்ளங்காலிலும் பசுநெய்யைத் தேய்த்துக் கொள்ளவும், இதற்குத் தளமிடுதல் என்றும் பெயர். சாப்பாட்டிலும் நெய் வேண்டிய அளவு கூட்டிக் கொள்ளவும். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் (சந்திர தரிசனம்) வெகு நேரம் சந்திரனை உற்றுப் பார்க்க வேண்டும். இரவு நேரங்களில் பசுவின் பாலைப் பருகுவதை விட சாதத்தில் ஊற்றிச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். பற்களைக் காலை, இரவு விதிப்படி துலக்கி வர வேண்டியது அவசியம்.

மேற்கூறியபடி நடக்காதவர்களைக் கண் நோய்கள் தானாகவே வந்தடையும், அவற்றை உங்களுக்குத் தெரிவித்து எமது கடமையைச் செய்துவிட்டோம் என்று எவ்வளவு அழகாகக் கூறியிருக்கிறார்... பார்த்தீர்களா?

கண்களின் வெளிப்புறம் உளுந்து மாவினால் வரம்பு கட்டி, அதனுள்ளே ஊற்றப்படும் த்ரைபல க்ருதம், ஜீவந்தியாதி க்ருதம் எனும் நெய் மருந்து சிகிச்சைக்கு நேத்ர தர்ப்பணம் என்று பெயர். கண் நரம்புகளை வலுப்படுத்துவதுடன், பார்வையையும் தெளிவுறச் செய்யும் இந்தச் சிகிச்சை முறை தற்சமயம் ஆயுர்வேத மருத்துவமனைகளில் மிகவும் பிரசித்தமாகி வருகிறது. கண்களுக்கென்றே பிரத்யேகமாக கற்றுக் கொடுக்கப்படும் அசைவு சிகிச்சைகளின் மூலமாகவும் கண்களை வலுப்படுத்தலாம்.

(தொடரும்)
பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)   செல் : 94444 41771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.