

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்
கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் - விரைய ஸ்தானத்தில் செவ்வாய், புதன் என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றம்:
18.10.2025 அன்று சூரியன் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
27.10.2025 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் ராசிக்கு மாறுகிறார்.
03.11.2025 அன்று லாப ஸ்தானத்தில் இருந்து சுக்ரன் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
கணிவான வார்த்தைகளால் குழந்தைகளை கவரும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் வசதிகள் அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். ஆனால் வீண் செலவுகள் உண்டாகும். மனதுக்கு பிடிக்காத இடத்திற்கு சென்று வரவேண்டி இருக்கும்.
தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடந்து முடிய திறமையாக செயல்படுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே செய்த திறமையான பணிகளுக்கு உரிய நற்பலனை பெறுவார்கள்.
குடும்பத்தில் இருப்பவர்களிடம் தன்மையாக பேசி பழகுவது நல்லது. தகப்பனாருடன் வீண் தகராறு ஏற்படலாம். கவனம் தேவை. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். குழந்தைகளுடன் நிதானமாக பேசி அவர்களுக்கு எதையும் புரிய வைப்பது நல்லது. அவர்களது முன்னேற்றத்துக்காக பாடுபடுவீர்கள்.
பெண்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பயணங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வியை பற்றிய பயம் நீங்கும். குழப்பம் இல்லாத தெளிவான மனதுடன் பாடங்களை படித்து வெற்றி பெறுவீர்கள்.
கலைத்துறையினருக்கு உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். அலட்சிய போக்கை கைவிடுவது நல்லது.
அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும்.
விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். மற்றவர்கள் மூலம் உதவி கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்
அனுஷம்:
இந்த மாதம் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளால் கவுரவம் அந்தஸ்து உயரும். துக்கமும், துன்பமும் நீங்கும். தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கி சாதகமாக நடந்து முடியும். தேவையற்ற மருத்துவ செலவு ஏற்படக்கூடும். வீடு, பூமி மூலம் வரவேண்டிய வருமானம் தாமதப்படலாம்.
கேட்டை:
இந்த மாதம் வாழ்க்கை துணையுடன் விவாதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலையும் காரிய தாமதத்தையும் சந்திக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: முருக கடவுளை வணங்க எல்லா வற்றிலும் நன்மை உண்டாகும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: நவ 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: நவ 2, 3, 4
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மாசி மாதப் பலன்கள் - மீனம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - மீனம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கும்பம்

தை மாதப் பலன்கள் - மீனம்
வீடியோக்கள்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG
தினமணி வீடியோ செய்தி...

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

